TamilSaaga

“ஓட்டுநரின் கவனக்குறைவு?” : சிங்கப்பூரில் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த “இந்திய தொழிலாளி” – MOM விசாரணை

சிங்கப்பூரில் கட்டுமான இடத்தில் கான்கிரீட் பம்ப் லாரியின் அடியில் சிக்கி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) மாலை 5.55 மணியளவில் இந்த விபத்து குறித்த செய்தியை பெற்றது என்று என்று SCDF செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த சம்பவம் சிங்கப்பூர் எண் 1 பெடோக் வடக்கு தெரு 2ல் நடந்துள்ளது. இந்த முகவரி பெடோக் ஆக்டிவ்எஸ்ஜி ஸ்டேடியத்தின் முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.

SCDF லாரியின் அடியில் சிக்கியிருந்த அந்த 37 வயதான நபரை வெளியேற்றுவதற்காக பாரம் தூக்கும் கருவிகளைப் பயன்படுத்தியது. மேலும் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் சாலையில் சுமார் எட்டு போலீஸ் வாகனங்கள் காணப்பட்டன. 26 வயதான நபர் ஒரு கவனக்குறைவான செயலில் ஈடுபட்டு மரணத்தை ஏற்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOM செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், பலியானவர் ஒரு இந்திய கட்டுமானத் தொழிலாளி என்றும், அவர் பணித்தளத்தின் வாயிலுக்கு அருகில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளராக செயல்பட்டு வந்தார் என்று தெரிவித்துள்ளது. லாரி கேட் மீது மோதியதில் அவர் பலியானார்.

MOMன் செய்தித் தொடர்பாளர், இந்த சம்பவத்தை குறித்து விசாரித்து வருவதாகவும், ஆக்கிரமிப்பாளருக்கு – லும் சாங் கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு – அனைத்து வாகன மற்றும் இயந்திர செயல்பாடுகளை பணியிடத்தில் நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

Related posts