உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுக்குமே ஊர் சுற்றுவது என்றால் கொள்ளை பிரியம் தான். அதிலும் விமானத்தில் ஊர் சுற்றணுனா வேண்டானா சொல்லுவாங்க. அப்படி ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும். சிங்கப்பூரில் விமானத்திலேயே போய் ஊர் சுற்றி விட்டு விமானத்தில் திரும்ப வரலாம். அதிலும் முற்றிலும் ஃப்ரீயா? இதெல்லாம் நடக்குமா எனக் கேட்டால் நடந்து இருக்கே!
மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஹாங்காங் சுற்றுலா வாரியத்தின் “ஹலோ ஹாங்காங்” பிரச்சாரத்திற்கு ஆதரவாக வழங்கப்படும் 500,000 விமான டிக்கெட்டுகளில் ஒன்றைப் பெறுவதற்கான வாய்ப்பை எப்படி பெறுவது என்பது பற்றிய விவரங்களை Cathay Pacific அறிவித்துள்ளது.
மொத்தம் 80,000 விமான டிக்கெட்டுகள் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஒதுக்கப்படும், அவற்றில் 12,500 சிங்கப்பூர் மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
World of Winners என அழைக்கப்படும் இந்த பிரச்சாரம், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸில் தொடங்கி, மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு ஆசியாவிற்கான கட்டங்களாக நடத்தப்படும். மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அடுத்த கட்டங்களில் நடத்தப்பட உள்ளன.
டிக்கெட்டுக்கு தகுதி பெற, நீங்கள் Cathay உறுப்பினராக இருக்க வேண்டும் (இணையதளம் வழியாக பதிவு செய்யவும்).
நீங்கள் World of Winners பிரச்சார இணையதளத்திற்குச் சென்று, உங்கள் கேத்தே உறுப்பினர் விவரங்களுடன் உள்நுழைந்து மூன்று கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்க வேண்டும்.
சிங்கப்பூரில் பிரச்சாரம் உள்ளூர் நேரப்படி மார்ச் 2ஆம் தேதி மதியம் முதல் மார்ச் 8ஆம் தேதி இரவு 11.59 வரை நடைபெறுகிறது. சரியான பதில்கள் தரும் முதல் 12,500 பயனர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
பரிசு பெறுபவர்கள் தொடர்புடைய வரிகள் மற்றும் சர்சார்ஜ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று Cathay Pacific தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு நுழைவு மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் வெற்றியாளர்கள் மார்ச் 20 அன்று பிரச்சார இணையதளத்தில் அறிவிக்கப்படுவார்கள். சிங்கப்பூர் மக்களுக்கு மார்ச் 2 இந்த போட்டிகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க