சிங்கப்பூரில் வேலை வர இருக்கும் ஊழியர்கள் வொர்க் பாஸில் வரும் போது சில கட்டுப்பாடுகள் இருக்கும். இதை தெரிந்து கொண்டு சிங்கப்பூருக்கு வேலை தேடுங்கள். அப்போது தான் எளிதாக இருக்கும். ஊழியர்கள் மட்டுமல்ல இந்த கட்டுப்பாடுகளை கம்பெனி நிர்வாகமும் கண்டிப்பாக ஃபாலோ செய்ய வேண்டும்.
படித்தவர்களும் படிக்காதவர்களும் கூட சிங்கப்பூருக்கு வொர்க் பெர்மிட் வருகிறார்கள். இந்த பெர்மிட்டில் வரும் போது நீங்க ஸ்கில் அடித்தும் வரலாம். அடிக்காமல் வருவதற்கும் நிறைய துறைகள் இருக்கிறது.
வொர்க் பெர்மிட்டின் காலம் பொதுவாக 2 ஆண்டுகள் ஆகும். தொழிலாளியின் பாஸ்போர்ட், security bond மற்றும் பணியாளரின் பணிக்காலம் ஆகியவற்றில் எது குறைவானதோ அது செல்லுபடியாகும்.
எந்த நிறுவனத்துக்கு உங்களை வேலைக்கு எடுத்து இருக்கிறார்களோ அவர்களிடம் தான் வேலை செய்ய வேண்டும். வேறு நிறுவனத்தில் வேலை செய்ய கூடாது. மீறி வேலை செய்பவர்களுக்கு பிரம்படியுடன் தண்டை கிடைக்கும்.
வொர்க் பெர்மிட்டில் நீங்கள் வேலைக்கு செல்லும் நிறுவனம் பின்வருவனவற்றை ஃபாலோ செய்ய வேண்டும்.
*செல்லுபடியாகும் வொர்க் பெர்மிட்டினை கொண்ட ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்தணும்.
*MOMமிடம் தெரிவித்திருந்தபடி ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட சம்பளத்தினை கொடுக்க வேண்டும்.
*ஊழியர்கள் தங்குமிடம் சரியாக இருப்பதை கம்பெனி நிர்வாகம் பார்த்து கொள்ள வேண்டும். சில நிறுவனம் தங்குமிடம் கொடுக்கவும் வேண்டும். *ஒவ்வொரு ஊழியருக்கும் மருத்துவக் காப்பீட்டை வாங்கிப் பராமரிக்கவும்.
*சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் மூலம் ஊழியர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புங்கள். அவர்கள் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் எனச் சான்றளிக்கப்பட்டால், வொர்க் பெர்மிட் ரத்து செய்யப்பட வேண்டும்.
இதையும் படிங்க: லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…
*ஒவ்வொரு ஊழியருக்கும் மாதாந்திர வெளிநாட்டு ஊழியருக்கான லெவியை செலுத்துங்கள்.
*மலேசியர் அல்லாத ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியருக்கும் Security bond எடுத்து இருக்க வேண்டும்.
*ஒரு ஊழியரின் வேலைவாய்ப்பு அல்லது வேலையில் மாற்றம் தொடர்பாக ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் அல்லது வேறு எந்த நபரிடமிருந்தும் எந்த தொகையையும் பெற கூடாது.
வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடு:
*வொர்க் பெர்மிட் பெற்ற நிறுவனத்துக்கு கீழ் மட்டுமே கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும்.
*வேலையின் தொடக்கத்தில் முதலாளி கொடுத்த முகவரியில் மட்டுமே வசிக்கவும். அவர்கள் வேறொரு இடத்திற்குச் செல்லத் திட்டமிட்டால், அவர்கள் தங்கள் முதலாளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.
*எப்போதுமே வொர்க் பெர்மிட் அட்டையை எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்லுங்கள் மற்றும் எந்த பொது அதிகாரியும் கோரும்போது அதை சமர்ப்பிக்கவும்.
*MOMன் அனுமதியின்றி சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூர் PRனை திருமணம் செய்யக் கூடாது. அவர்களின் பணி அனுமதிகள் காலாவதியான பிறகும், ரத்து செய்யப்பட்ட பிறகும் அல்லது ரத்து செய்யப்பட்ட பின்னரும் கூட இது பொருந்தும்.
வேலை முடிந்தாலோ அல்லது நிறுத்தப்பட்டாலோ அல்லது ஊழியரே ராஜினாமா செய்தாலோ, கண்டிப்பாக கம்பெனி நிர்வாகம் செய்ய வேண்டியது.
*ஊழியரின் கடைசி நாள் வேலைக்கு பிறகு 1 வாரத்திற்குள் பணி அனுமதியை ரத்துசெய்யவும்.
*செக்-இன் லக்கேஜ் அலவன்ஸுடன் விமான டிக்கெட் வாங்குவது உட்பட, திருப்பி அனுப்புவதற்கான செலவை ஏற்கவும்.
*சம்பளம் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து வேலை சம்மந்தமான பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும்.