TamilSaaga

பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் டாடா காட்டிவிட்டு இந்தியாவிற்கு புறப்பட்ட இண்டிகோ விமானம்…. விழி பிதுங்கி நின்ற பயணிகள்!

இந்தியாவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை அடைந்த இண்டிகோ விமானம் பணிகளை தரையிறக்கிய பின்பு லக்கேஜ்களை இறக்காமலேயே அடுத்த கட்டமாக பயணிகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் இந்தியாவில் உள்ள பெங்களூருக்கு திரும்பியது. சுமார் ஒன்றரை மணி நேரம் பறந்த பிறகு மீண்டும் சாங்கி விமான நிலையத்திற்கு திரும்பிய சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் காலையில் நிகழ்ந்ததாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. புதன்கிழமை சுமார் 5. 35 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் 6.50 மணி அளவில் திரும்பவும் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் மறுபடியும் காலை சுமார் 10 மணியளவில் புறப்பட்டு 11:45 மணிக்கு பெங்களூருவை அடைந்தது. இக்குழப்பம் நிகழ்ந்ததற்காக நிறுவனம் தற்பொழுது அறிக்கையின் மூலம் நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்துள்ளது.

இதன்படி சிங்கப்பூர் மற்றும் பெங்களூருக்கு இடையிலான சேவையில் தவறு நிகழ்ந்து விட்டதால் மீண்டும் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்துள்ளது. அதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதால் நேர்ந்த குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் காத்திருந்த பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.இருந்தாலும் இச்சம்பவத்தின் மூலம் பயணிகள் கோவம் அடைந்தனர் .ஏற்கனவே தூக்கமின்றி இருந்த பயணிகள் அதிகாலை நேரத்தில் மீண்டும் விமானம் புறப்பட்ட இடத்திற்கு திரும்பி வந்ததால் உறக்கமின்றி மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர். இதன் விளைவாக சில பயணிகள் ட்விட்டரில் தங்களது கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். மேலும் விமான நிறுவனம் ஆனது பயணிகளின் லக்கேஜ்களை மறந்து சென்றது மிகப்பெரிய தவறு என்றும் இது போன்ற சம்பவம் இனிமேல் நிகழாமல் விமான நிறுவனம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts