TamilSaaga

லட்சத்தில் காசு கொடுக்க முடியாதா? கவலையை விடுங்க… Skilled Test இருக்கு… பாஸ் பண்ண என்ன செய்யணும் தெரியுமா… இத படிங்க முழுசா…

சிங்கப்பூரில் வருவதற்கு பல வழிகள் இருக்கிறது. இதில் அதிகம் பாதுகாப்பான வழி என்றால் அது டெஸ்ட் அடித்து வருவது தான். S Pass மற்றும் E Passல் சிங்கப்பூர் வருவது எளிதானது என்றாலும் அதில் நிறைய பித்தலாட்டங்கள் அதிகமாகி விட்டது.

ஏஜென்ட்டுகள் ஏமாற்றி விடுகின்றனர். சிலருக்கு பல மாதங்கள் தாண்டி காசு கிடைத்தாலும் சிங்கப்பூர் கனவுகள் காணாமல் போய்விடுகிறது. சிலருக்கு கனவுடன் சேர்ந்து காசும் தொலைந்து விடுகிறது.

ஏஜென்ட் தெரிந்தவர்களாக இல்லாமல் இருப்பவர்கள் இந்த பிரச்னைகள் எல்லாம் நடக்காமல் இருக்க Skilled Test எனக்கூறப்படும் டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்வதே பாதுகாப்பானது.

குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்ய இருக்கும் ஊழியர்களுக்கு இன்ஸ்டியூட்டிலே பயிற்சி கொடுத்து தேர்வு எழுத வைத்து அனுப்புவதே சிங்கப்பூர் செல்ல வைக்கப்படும் டெஸ்ட். சிங்கப்பூரில் வேலையும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரசாங்கத்துக்கு அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும்.

இதில் டெஸ்ட் அடித்து வருபவர்கள் என்றால் அந்த தொகையில் கொஞ்சம் குறையும். இதனால் நிறுவனங்கள் டெஸ்ட் அடித்து வரும் ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. மேலும், டெஸ்ட் அடித்து வரும்போது கண்டிப்பாக யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. ஏஜென்ட்களிடம் 3 முதல் 4 லட்சங்களை உடனே கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.

டெஸ்ட் அடிக்கும் இன்ஸ்ட்யூட்டில் சில ஆயிரங்களை மட்டுமே முதலில் கட்ட வேண்டும். அதன்பின்னர் உங்களுக்கு வேலை உறுதியாகும் சமயத்தில் மீதம் உள்ள பணத்தினை கொடுக்கலாம். டெஸ்ட் அடிக்க சேர்ந்து விட்டாலே உங்களுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைப்பது உறுதியாகி விடும். மேலும் டெஸ்ட் அடித்து வாங்கும் சான்றிதழ் 10 வருடத்திற்கு செல்லுபடி ஆகும்.

இதனால் ஒரு கம்பெனியில் மட்டுமல்ல 10 வருடத்திற்கு எந்த கம்பெனியில் வேண்டும் என்றாலும் உங்களால் வேலை செய்ய முடியும். இரண்டு வருடம் வேலை செய்து விட்டு வேறு கம்பெனிக்கு மாறும் போது உங்களுக்கு முதல் முறையை விட பாதி அளவில் தான் செலவுகள் இருக்கும்.

ஆனால் டெஸ்ட் அடித்து வரும் வேலைகள் கொஞ்சம் கஷ்டமானதாக இருக்கும். டெஸ்ட் முடித்தவர்கள் வொர்க் பெர்மிட்டில் தான் சிங்கப்பூர் வர முடியும். ஆனால் சில படித்தவர்கள் டெஸ்ட் அடித்து வந்தப்பின் ஒரு வருடம் வேலை செய்துவிட்டு அந்த நிறுவனத்தில் தங்களது டிகிரி சான்றிதழை காட்டி விட்டு வேறு வேலையில் மாற்றிக்கொள்ளலாம்.

டெஸ்ட் அடிக்க செல்லும் போது சில துறைகள் இருக்கும் அதில் ஒன்றை தேர்வு செய்தப்பின் அதற்கான ஒன்று அல்லது இரண்டு மாதம் பயிற்சி கொடுக்கப்படும். பின்னர் ஒரு பிராக்டிக்கல் மற்றும் எழுத்து தேர்வு இருக்கும். இதில் எழுத்து தேர்வை விட பிராக்டிக்கல் தான் ரொம்ப முக்கியம்.

இதில் பிராக்டிக்கல் தேர்வின் போது சிங்கப்பூர் நிறுவனங்களில் இருந்து மேற்பார்வையாளராக ஒருவர் வந்திருப்பார். அவர் கொடுக்கப்படும் நேரத்தில் அந்த தேர்வை முடித்து கொடுத்தால் தான் பாஸ். சின்ன தவறு இருந்தால் கூட தேர்வை நீங்க மீண்டும் அடுத்தமுறை எழுத வேண்டும்.

அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவழிக்க வேண்டும். ஆனால் முதல்முறையை விட கம்மியான தொகையே செலவாகும்.

என்னென்ன படிப்புகள் இருக்கும்?

  • கட்டடங்களில் கம்பி கட்டும் பணி
  • எலக்ட்ரிக்கல் வேலைகள்
  • ப்ளம்பிங் வேலைகள்
  • வாட்டர் ப்ரூப்பிங் பணிகள்
  • ஏசி சம்மந்தப்பட்ட வேலைகள்

இதில் அதிகமான வேலை கிடைப்பதும், ஓவர் டைம் வேலைகள் கிடைப்பது கம்பி கட்டும் வேலைகளில் தான். அடுத்த எலக்ட்ரிக்கல் இதிலும் அதிகமான வேலைகள் கிடைக்கும். மற்ற துறைகளில் ஓவர் டைம் பெரிதாக கிடைக்காது. இதை வைத்து இன்ஸ்ட்யூட்களில் படிப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு இன்ஸ்ட்யூட்டில் மொத்தமாக 2.10 லட்சத்தில் இருந்து 2.50 லட்ச ரூபாய் மட்டுமே செலவாகும். தமிழ்நாட்டில் இருக்கும் இதற்கான மையங்களில் சேரும்போது ஏஜென்ட் யாரை வைத்து சேருவதே சிறந்தது. இதனால் உங்களால் சீக்கிரமாக தேர்வினை எழுத முடியும். இல்லையென்றால் அந்த மாதம் இவ்வளவு பேர் தான் தேர்வுக்கு செல்லலாம் என்ற quotaவில் உங்களால் இடம் பிடிக்க முடியாது.

ஏஜென்ட்டை பேச வைத்து சேர்ந்தால் ஒன்று அல்லது இரண்டு மாதத்திலேயே உங்களால் தேர்வு எழுத முடியும். இதற்கு 10 நாட்களிலேயே ரிசல்ட் வந்து சான்றிதழ் கிடைத்து விடும். உங்களுக்கு வேண்டும் என்றால் இன்ஸ்டியூட்டிலேயே கம்பெனி போட்டு தருவார்கள். இல்லை உங்களுக்கு தெரிந்தவர்களை வைத்து கம்பெனி போட்டு சிங்கப்பூர் வந்து விடலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts