TamilSaaga

“ஏற்ற இறக்கத்தோடு காணப்படும் மின்சாரச் சந்தை” : சிங்கப்பூரில் சேவைகளை நிறுத்தும் Ohm Energy

தீவில் தற்போது நிலவும் ஏற்ற இறக்கமான மின்சாரச் சந்தையைக் காரணம் காட்டி, சிங்கப்பூரில் தனது செயல்பாடுகளை நிறுத்தும் சமீபத்திய மின்சார சில்லறை விற்பனையாளராக மாறியுள்ளது பிரபல Ohm Enegry நிருவனம். “சிங்கப்பூரில் கடந்த சில மாதங்களாக, ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத்தை விட குறைந்த விலையில் எங்கள் திட்டங்களின் விலை நிர்ணயம் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நிலையற்ற மின்சார சந்தையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்று மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது அந்த நிறுவனம்.

அந்நிறுவனத்தின் இந்த முடிவை அடுத்து வரும் அக்டோபர் 20 முதல் வாடிக்கையாளர்களின் மின் கணக்குகள் SP குழுமத்திற்கு மாற்றப்படும். எங்களது தற்போதைய வாடிக்கையாளர்கள் அனைவரும் எஸ்பி குழுமத்திற்கு சுமூகமாக மாற்றப்படுவதை உறுதி செய்ய நாங்கள் தற்போது EMA மற்றும் SP குழுமத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். உங்கள் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்,” என்று Ohm நிறுவனம் தெரிவித்துள்ளது.

“உங்கள் கணக்கு SP குழுமத்திற்கு மாற்றப்பட்டவுடன், நீங்கள் SP குழு சேவைகளுடன் தொடர்ந்து இணைந்திருக்கலாம். அல்லது மற்றொரு மின்சார விற்பனையாளரை அணுகலாம்.” மின்சார சில்லறை விற்பனையாளர் ஐஸ்விட்ச் “தற்போதைய மின்சார சந்தை நிலைமைகள்” காரணமாக விரைவில் செயல்பாடுகளை நிறுத்திவிடும் என்று கூறிய ஒரு நாள் கழித்து அதன் அறிவிப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் நவம்பர் 12 முதல் எஸ்பி குழுமத்திற்கு தங்கள் கணக்குகளை மாற்றுவார்கள்.

சிங்கப்பூரின் திறந்த மின்சக்தி சந்தையின் கீழ், நுகர்வோர் எஸ்பி குழுமத்திடமிருந்து நெறிப்படுத்தப்பட்ட கட்டணத்தில் அல்லது மின்சார சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து தங்கள் தேவைகளுக்கு ஏற்ற விலை திட்டத்தில் மின்சாரத்தை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts