சிங்கப்பூரில் நடந்த பொங்கல் போட்டியில் சுதாரவி என்பவர் வரைந்த திருவள்ளுவர் ரங்கோலி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று இருக்கும் நிலையில், ஒரு சர்ச்சையில் கூட சிக்கி இருக்கிறது.
தமிழகத்தில் அடிக்கடி நிலவும் ஒரு சர்ச்சை தற்போது சிங்கப்பூரிலும் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் பாடபுத்தகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளானது. அவர் இந்து அல்ல என பலரும் போர் கொடி தூக்கிய நிலையில் அந்த புகைப்படம் பின்னர் மாற்றப்பட்டது.
இந்தியாவை ஆளும் கட்சியான பாஜக திருவள்ளுவர் இந்து தான் என தொடர்ந்து வாதிட்டு வருகிறது. சரி சிங்கப்பூரில் நடந்த கதைக்கு வருவோம்.
இதையும் படிங்க: லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் வேலைகள்… சிங்கப்பூரில் 2023ன் டாப் 15 jobs இது தான்.. தெரிஞ்சிக்கோங்க உங்க லைஃப் செட்டில் தான்!
சிங்கப்பூரில் தமிழுக்கு எப்போதுமே பெரிய மரியாதை கொடுக்கப்படும். லிட்டில் இந்தியா என்ற பகுதியில் அதிக அளவிலான தமிழர்களும், இந்தியர்களும் இணைந்து வசித்து வருகின்றனர். சமீபத்தியில் பொங்கல் பண்டிகை அங்கு விமரிசையாக நடைபெற்றது.
பட்டிமன்றம், ரங்கோலி எனக் கலைக்கட்டியது. எப்போதும் போல தமிழரான சுதா ரவி என்பவர் ரங்கோலி போட்டார். 2016ம் ஆண்டு 3200 சதுர அடியில் இவர் போட்ட ரங்கோலி வைரலாக பேசப்பட்டது. சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றது. இந்த வருடத்தின் கோலத்தில் புதுவிதம் காட்ட நினைத்தாராம் சுதா ரவி.
கோலத்தில் தமிழறிஞர்களை வரைய நினைத்த சுதாரவி ஐஸ்க்ரீம் குச்சியின் மூலம் ஒரு மாதத்திற்கு முன்னரே செய்ய தொடங்கினார். அவருடன் அவர் மகள், கலாமஞ்சரி அமைப்பினர் உதவியாக இருந்தனர். ஒருவழியாக பொங்கலுக்கு திருவள்ளுவரும், ஒளவையாரும் காவி உடையில் பட்டையுடன் காட்சி அளித்தனர்.
இதையும் படிங்க: சும்மா சாட்டிங் செய்ய தான வந்தோம்… கிரெடிட் கார்டுல காசு பிடிங்குவீங்களா… கடுப்பான பயனர்கள்… வைரலாகும் Bondee ஆப்!
இந்த ரங்கோலியும் சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்டிஸில் இடம்பெற்றது. ஆனால் சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது. சமண முனிவரான திருவள்ளுவருக்கு காவி உடையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் தன்னுடைய குறளில் எங்குமே கடவுளை குறித்து கூறாத நிலையில் இப்படி செய்யலாமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டம் தாண்டி இந்த சர்ச்சை சிங்கப்பூர் வரை வந்து விட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.