TamilSaaga

சிங்கப்பூர்.. “சாலையில் தவழ்ந்து சென்ற முதியவர்” – உதவிக்காக வைரலாக்கப்பட்ட Video – அமைச்சர் சண்முகம் பதில்

சிங்கப்பூரில் Chong Pong பகுதியில் இந்த வார துவக்கத்தில் முதியவர் ஒருவரின் வீடியோ பேஸ்புக்கில் பரவியது. அவர் அந்த பகுதியில் ஒரு மரப் பலகையுடன் காணப்பட்டார், அந்த பலகையின் கீழே சக்கரங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அந்த முதியவர் அப்பகுதி முழுவதும் சுற்றி வர அந்த சக்கரங்கள் பொருத்தப்பட்ட பலகையை பயன்படுத்தியுள்ளார். ஜனவரி 13 அன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், அந்த முதியவர் ஒரு பாதசாரிகள் நடக்கும் பகுதியில் தனியாக அமர்ந்திருப்பதைக் காணமுடிந்தது. அதை தொடர்ந்து அவர் ஒரு டாக்ஸியில் ஏற முயற்சிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

இதையும் படியுங்கள் : “அது வளர்ப்பு காகம் அல்ல” : ஆனா தினமும் வந்து என்னை தடவிகொடுக்க சொல்கிறது – சிங்கப்பூரில் HDB Flatல் நடக்கும் அதிசயம் – Video உள்ளே

தரையில் கைகளை வைத்து மட்டுமே அவரால் அந்த பலகை மூலம் நகரமுடியும் என்பதால் அவர் அந்த டாக்ஸியில் ஏற முயற்சித்தபோது சிலரின் கவனம் அவர்மீது திரும்பியது. உடனடியாக சில நொடிகளில், இரண்டு மனிதர்கள் அந்த முதியவரை தரையில் இருந்து தூக்கி, டாக்சியின் பின் இருக்கையில் அவரது உடைமைகளை வைக்க முன்வந்தனர். அந்த டாக்ஸி டிரைவரும் முதியவருக்கு கை கொடுக்க, வாகனத்தை விட்டு இறங்கி வந்தார். இறுதியில் பத்திரமாக அந்த முதியவரை காரில் ஏற்றிக்கொண்டு அந்த இடத்தில் இருந்து டாக்ஸி புறப்பட்டது.

மேலும் அந்த வீடியோவில் “அவருக்கு உதவிய வழிப்போக்கர்களுக்கும், அவரை அழைத்துச் சென்ற டாக்ஸி ஓட்டுநருக்கும் மிக்க நன்றி”. “தயவுசெய்து இதைப் அதிகம் பகிரவும், அந்த முதியவரை அடையாளம் காணும் யாராவது அவருக்குத் தேவையான உதவியைப் செய்வார்கள் என்று நம்புகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து இன்று ஜனவரி 14 அன்று தனது முகநூலில் பதிவிட்டுள்ள சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் “சோங் பாங்கில் உள்ள ஒரு முதியவர் தொடர்பான வீடியோ எனக்கு அனுப்பப்பட்டது. அவர் நடப்பதற்கு சிரமங்களைக் கொண்டிருப்பதாகவும், சக்கரங்கள் கொண்ட சிறிய மரப் பலகையைப் பயன்படுத்தி தான் நகர்வதாகவும் எனக்கு தெரியவந்தது”.

“இந்த முதியவரின் பெயர் திரு லீ. சிங்கப்பூரின் The grassroots, Chong Pang CC மற்றும் Touch Cluster Support ஆகிய நிறுவனங்கள் கடந்த 2015ம் ஆண்டு முதல் திரு லீ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சமூக ஆதரவை அளித்து வருகின்னர். Chong Pang பகுதியின் தன்னார்வ அமைப்புகளும் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு அத்தியாவசியமான உதவிகளை வழங்கி வருகின்றன” என்றும் அவர் கூறினார். “மேலும் Senior Mobility Fund மூலம் அவருக்கு சக்கர நாற்காலி வாங்கப்பட்டது, ஆனால் லீ-க்கு அதை பயன்படுவதில்லை உடன்பாடில்லை”. பல முறை தன்னார்வலர்கள் அவரை சக்கர நாற்காலியை பயன்படுத்த அறிவுறுத்தியும் அவர் அதை பயன்படுத்தவில்லை” என்றார் அமைச்சர் சண்முகன்.

இதையும் படியுங்கள் : “பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை” : சிங்கப்பூரில் HDB பிளாட் உச்சியில் Air-Con பழுது பார்க்கும் தொழிலாளி – கொதித்த நெட்டிசன்கள்

“இந்நிலையில் தான் அவருடைய பக்கத்து வீட்டுக்காரர் வீட்டைச் சுற்றிச் செல்வதற்காக மரப்பலகை ஒன்றை சக்கரம் வைத்து அளித்துள்ளார், அதையே அவர் வெளியிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளார் என்று அவர் கூறினார். இந்த நிகழ்வில் Feedback அளித்த அனைவருக்கும் நன்றி; திரு. லீ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி மற்றும் உதவிகளை வழங்குவோம் என்றார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts