TamilSaaga

சிங்கப்பூரில் விமானப் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க S$500 மில்லியன் – புதிய வேலைவாய்ப்புகளுக்கு இது வழிவகுக்குமா?

சிங்கப்பூரில் வரும் நிதியாண்டில் விமானப் போக்குவரத்து மீண்டும் மீண்டு வரும்போது, ​​விமான நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிப்பதற்காக 500 மில்லியன் சிங்கப்பூர் டாலர்களை அரசாங்கம் வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் இன்று புதன்கிழமை (மார்ச் 9) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நாடாளுமன்ற குழு விவாதத்தில் பேசிய அவர், சிங்கப்பூரின் சர்வதேச விமானப் போக்குவரத்தின் மையம் என்ற அந்தஸ்தை மீட்டெடுக்கும் வகையில், அதிகரித்த பயணிகளின் எண்ணிக்கையை நிர்வகிப்பதில் இந்தத் துறையின் திறனை அதிகரிக்க இந்த “OneAviation Resilience Package” உதவும் என்றார்.

“இதே வேலையாத்தான் இருந்துருப்பான் போல” : சிங்கப்பூரில் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஆசாமி

இந்த OneAviation Resilience Package ஆனது விமானத் துறையின் பணியாளர்களை மீண்டும் கட்டமைக்க உதவும் S$60 மில்லியன் திட்டங்களை உள்ளடக்கியது என்று போக்குவரத்து அமைச்சகம் (MOT) ஒரு தனி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உள்ளூர் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 10 சதவீதத்தை ஆறு மாதங்களுக்கு “விமானப் பணியாளர்கள் தக்கவைப்பு மானியத்தின் நீட்டிப்பு” மூலம் விமான நிறுவனங்கள் ஊதிய ஆதரவைப் பெறும். ஒரு பணியாளருக்கு மொத்த மாத ஊதியத்தில் S$4,600 என்ற வரம்பு பொருந்தும்.

மற்றொரு S$390 மில்லியன் அளவிலான தொகை, செலவின நிவாரணம் மற்றும் பொது சுகாதார பாதுகாப்புக்கான ஆதரவிற்காக ஒதுக்கப்படும். விமான நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான செலவை அரசாங்கம் தொடர்ந்து செலுத்தும், இது பாதுகாப்பான விமானப் பயணத்தை செயல்படுத்தும் என்றும், விமானப் பணியாளர்கள் மற்றும் நமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்று அமைச்சகம் கூறியது. உலகளவில் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், விமானப் போக்குவரத்துத் துறைக்கான இந்த கூடுதல் நிதியானது விமான துறையின் மீட்பை உறுதிசெய்யும் என்றும் அமைச்சகம் கூறியது.

சிங்கப்பூரில் லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் – வரப்பிரசாதமாய் வரும் புதிய Rules!

கடந்த 2020 ஆம் ஆண்டில், தொற்றுநோய் காரணமாக சாங்கி விமான நிலையத்தின் டெர்மினல் 5ன் வளர்ச்சி திட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகால முடக்கம் T5 வடிவமைப்பை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளத்தியது என்றும் திரு. ஈஸ்வரன் கூறினார். மேலும் இந்த புதிய ஆதரவு திட்டம் மூலம் நிச்சயம் சிங்கப்பூரில் விமான துறைகளில் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் அமைச்சர் ஈஸ்வரன் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts