சிங்கப்பூரில் சுகாதாரத் துறை அமைச்சர் ஓங் யீ காங் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு காரணங்களால் வயதில் முதியவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்வருவதில்லை. சுமார் 24 சதவீதம் முதியோர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. இந்த நிலை மிகவும் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்திலும் சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சூழலில் மக்கள் வெளியே நடமாடத் துவங்கி விட்டார்கள். இதனால் முதியோர்கள் தொற்றினால் பாதிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
எனவே மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு அமைச்சர்களும் அதன் நன்மைகளை எடுத்துக்கூறி வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதனையும் அமைசர் ஓங் யீ காங் ஷேர் செய்துள்ளார்.