TamilSaaga

“சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு புழக்கம்” : தடையிருந்தும் உயரும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை

சிங்கப்பூரை பொறுத்தவரை இளைஞர்களை திசை திருப்பும் எந்த ஒரு தீய பழக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் மிகவும் கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகளில் விற்பனையானது கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் முழுமையாக தீவு முழுவதும் தடை செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் : பயணிகள் விமானங்களை, சரக்கு விமானங்களாக மாற்றிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – ஏன்?

ஆனால் தற்பொழுது அதிர்ச்சி தரும் தகவலாக கடுமையான தடைகள் இருந்தும் அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ள மிலியூ நிறுவனம் தற்போது இணைய வழியில் நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் சுமார் 5500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் என்றும். அவர்களில் சுமார் 4 விழுக்காட்டினர் இப்பொழுது மின் சிக்ரெட்கள் அல்லது குறைந்த வெப்பநிலையில் ஆவியாகும் மின் சிகரெட்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் 21 முதல் 65 வரை வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்நிறுவனம் இதே போன்ற ஒரு ஆய்வை இவ்வாண்டு தொடக்கத்தில் நடத்தியது, அப்பொழுது அந்தக் கருவிகளை பயன்படுத்துவோரின் அளவு என்பது 3% ஆகவே இருந்தது. இந்த மின் சிகரெட்டுகளின் பயன்பாடானது அடிமையாக்கும் நிலையில் உள்ளது. மேலும் அதில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருப்பதாக healthclub.sg கூறுகின்றது.

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக மின் சிகரெட்டுகள் அதிக அளவில் கிடைப்பதே இதற்கு காரணம் என்று சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் புகையிலை சங்கம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக சிகரெட்டுகளை வைத்திருப்பதற்காக 2018 பிப்ரவரி முதல் 2001 ஜூன் வரை பிடிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று சுகாதாரமும் ஒரு அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts