TamilSaaga

லட்சங்களில் சம்பளம் கொடுக்கும் வேலைகள்… சிங்கப்பூரில் 2023ன் டாப் 15 jobs இது தான்.. தெரிஞ்சிக்கோங்க உங்க லைஃப் செட்டில் தான்!

சிங்கப்பூரில் வேலைக்கு பல துறைகளில் இருந்தும் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை சம்பளமாக 700 சிங்கப்பூர் டாலரில் துவங்கி 7000 சிங்கப்பூர் டாலர் வரை கூட சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் இந்த வருடம் 2023ம் ஆண்டுக்கான டாப் 5 சம்பளங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்க லைஃப் ஈசியாக இருக்கும்.

சிங்கப்பூரில் Sales development associate, cloud engineer மற்றும் enterprise account executive ஆகிய வேலைகளுக்கு அதிகமான தேவைகள் உருவாகி இருப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புக்காக இயங்கும் தளமான LinkedInன் சமீபத்திய வேலைகள் உயர்வு பட்டியலில் technology and sales-தொடர்பான வேலைகள் இங்கு மிக வேகமாக வளர்ந்து வரும் முதல் 15 வேலைகளில் இடம்பெற்றுள்ளன.

முதல் 15 வேலைகளில் நான்காவது இடத்தில் உள்ள ஹெல்த்கேர் அசிஸ்டென்ட் மற்றும் 14வது இடத்தில் உள்ள investment அசோசியேட் மட்டுமே வேறு துறைகளாக இருக்கின்றது.

இதையும் படிங்க: Skilled டெஸ்ட் முடிக்காமல் சிங்கப்பூர் வரணுமா? அதுவும் $1500 சம்பளம் கொடுக்கும் இந்த வேலைகளுக்கு! அதுக்கு தான services துறை இருக்கு!

LinkedInன் மில்லியன் கணக்கான சிங்கப்பூர் பயனர்களின் dataவை ஆய்வு செய்த இந்த ஆய்வு, ஜனவரி 2018 முதல் ஜூலை 2022 வரையிலான பயனர்களிடையே அதிக வளர்ச்சி விகிதங்களை அனுபவிக்கும் வேலைக்கான துறைகளை கணக்கிட்டுள்ளது. LinkedInல் தற்போது வரை மூன்று மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.

டிசம்பர் 2022 இல் நடத்தப்பட்ட தனியான பணியாளர் ஆய்வின் முடிவுகளுடன், புதன்கிழமையன்று பட்டியல் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரில் 1,000 பேர் உட்பட 17 Marketகளில் கிட்டத்தட்ட 23,000 தொழிலாளர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்திய அந்த ஆய்வில், டிசம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது 2022 டிசம்பரில் சிங்கப்பூரில் hiring 34 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த சரிவு இருந்தபோதிலும், சிங்கப்பூரில் உள்ள மூன்றில் இரண்டு ஊழியர்கள் 2023 ஆம் ஆண்டில் வேறு வேலைக்கு மாறுவது குறித்து பரிசீலித்து வருகின்றனர். அதே சமயம் வேலை தேடுபவர்களின் அதிக விகிதத்தினர் வாழ்க்கைச் செலவு உயரும்போது நிதிப் பாதுகாப்பை அதிகரிக்க அதிக ஊதியத்திற்கான வேலையை தேடுவதாக Linkedin தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வற்றாத நதியே காஞ்சி போய்ட்டா? சிங்கப்பூரின் MOM வெப்சைட் மீதே கை வைத்த தில்லாலங்கடி கும்பல்… விசா செக் செய்ய போற முன்னாடி இத செக் பண்ணிக்கோங்கோ!

டிசம்பர் கணக்கெடுப்புப்படி நான்கு சிங்கப்பூர் ஊழியர்களில் மூன்று பேர் அதிக வேலை மற்றும் குறைத்து மதிப்பிடுவதாக கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 10 பேரில் ஏழு பேர் தங்கள் முதலாளி தங்கள் வளர்ச்சியில் முதலீடு செய்யவில்லை என்று நம்புகிறார்கள்.

சிங்கப்பூரில் வெகு வேகமாக வளரும் 15 வேலைகள்:

  • Sales development representative
  • Cloud engineer
  • Enterprise account executive
  • Healthcare assistant
  • Cyber security engineer
  • Site reliability engineer
  • Back-end developer
  • Cyber security consultant
  • Technical account manager
  • Customer success specialist
  • Machine learning engineer
  • Artificial intelligence engineer
  • DevOps engineer
  • Investment associate
  • Product owner

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts