TamilSaaga

சிங்கப்பூரில் கடலில் விழுந்த “குமரன் மரைன்” நிறுவன ஊழியர்… Concrete இடிந்து கடலில் மூழ்கிய கிரேன் – 24 மணி நேரமாகியும் கண்டறிய முடியாமல் திணறல்!

SINGAPORE: சிங்கையில் நேற்று (ஆகஸ்ட் 22) காலை துவாஸில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கரையோர கிரேன் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் நான்கு தொழிலாளிகள் காயமடைந்த நிலையில், ஒருவர் கடலுக்குள் விழுந்துவிட்டார். ஆனால், இன்னும் அவரை கண்டறிய முடியவில்லை.

திங்கட்கிழமை காலை 10.40 மணியளவில் கிரேன் நின்று கொண்டிருந்த Concrete தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கிரேன் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.

இன்று பிற்பகல் 3.15 மணி நிலவரப்படி, கடலில் விழுந்த அந்த வெளிநாட்டு ஊழியர் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, இந்த வெளிநாட்டு ஊழியர் சிங்கப்பூரைச் சேர்ந்த குமரன் மரைன் (Kumarann Marine) எனும் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர, அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

51 Pioneer Sector 1-ல் நடந்த இந்த விபத்தின் விளைவாக 29 மற்றும் 31 வயதுடைய மற்ற இரண்டு வங்கதேச தொழிலாளர்கள், 48 வயதான சீன நாட்டவர் மற்றும் 40 வயதான உள்ளூர் தொழிலாளி ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மேலும் படிக்க – குழாய்க்குள் இறங்கிய ஐந்தே நிமிடத்தில் பிரிந்த உயிர்.. சிங்கப்பூரை உலுக்கிய தமிழக ஊழியர் பெருமாள் அழகுராஜா மரணம்… வெளிநாட்டு ஊழியர்களின் உயிரை காவு வாங்கும் Keppel Shipyard!

தற்போது, அவர்களது உடல்நிலை சீரான நிலையில் உள்ளதாக சிங்கை மனிதவளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) திங்கள்கிழமை நண்பகல் விபத்து குறித்து எச்சரித்ததாகத் தெரிவித்துள்ளது. 40 வயதான சிங்கப்பூரர் மற்றும் 31 வயதான வங்காளதேசம் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும், கப்பலில் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டதாகவும் MOM தெரிவித்துள்ளது. முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கெப்பல் ஷிப்யார்ட் தெரிவித்துள்ளது.

கடலில் விழுந்த அந்த வெளிநாட்டு ஊழியர் உயிருடன் திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts