TamilSaaga

Breaking : இந்திய வம்சாவளி மலேசியர் தட்சிணாமூர்த்தி.. சிங்கப்பூரில் ஏப்ரல் 29 விதிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனை ரத்து – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சிங்கப்பூரில் இன்று ஏப்ரல் 28 அன்று சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமை விடியற்காலையில் தூக்கிலிடப்படவிருந்த மலேசிய போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி தட்சிணாமூர்த்தி கட்டையாவுக்கு தூக்கு தண்டனைக்கு கடைசி நிமிடத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலையின் கூற்றுப்படி, தட்சிணாமூர்த்தியின் தூக்கு தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.

தட்சிணாமூர்த்திக்கு ஆதரவாக தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், AGC (Attorney-General’s Chambers) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அதாவது, தட்சிணாமூர்த்திக்கு ஏப்ரல் 29ல் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது.

புலம்பெயர் தொழிலாளர்களே இனி பார்த்து செலவு செய்யுங்கள்.. சிங்கப்பூரில் அதிகரிக்கும் பணவீக்கம் – மேலும் விலைவாசி உயர வாய்ப்பு!

இந்நிலையில் தட்சணாமூர்த்தி என்ற மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியரும் ஏப்ரல் 29ம் தேதி தூக்கிலிடப்படவுள்ளதாக சிங்கப்பூர் அரசு அறிவித்தது. தட்சிணாமூர்த்தி கட்டையாவின் குடும்பத்தினருக்கு கடந்த ஏப்ரல் 21ம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் ஏப்ரல் 29-ம் தேதி அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு 44.96 கிராம் டயமார்ஃபின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக தட்சிணாமூர்த்தி இந்த தண்டனையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூர் அரசு தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனை அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறவும், நீதிமன்றச் செயல்பாடுகள் தடையின்றி தொடர அனுமதிக்கவும் பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts