TamilSaaga

Visit Pass தேவையில்லை… சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு – சுடச்சுட MOM-ன் முக்கிய அறிவிப்பு

சிங்கப்பூர்: தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், வரும் ஜூன் 24 முதல் சமூகப் இடங்களுக்கு செல்ல அனுமதிச் சீட்டு தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் (ஜூன்.10) நேற்று அறிவித்துள்ளது.

ஆனால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பிரபலமான நான்கு இடங்களுக்குச் செல்ல விரும்பினால் விசிட் பாஸுக்கு (Visit Pass) விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது, Chinatown, Geylang Serai, Jurong East and Little India ஆகிய இந்த நான்கு இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் செல்ல விரும்புவோருக்கு விசிட் பாஸ் கட்டாயம் தேவை.

அதேபோல், தற்போது தங்குமிடங்களில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், community-க்குள் ஏதேனும் ஒரு இடத்திற்குச் செல்ல விரும்பினால், வெளியேறும் அனுமதிச் சீட்டுக்கு (exit pass) விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க – 4,500 கி.மீ… 3 நாடுகள்.. இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்ல Bus ரெடி! Flight-க்கே சவால் விடும் ‘சக்கைப்போடு’ பயணம்!

ஒவ்வொரு ஞாயிறு அல்லது பொது விடுமுறைக்கு மொத்தம் 80,000 விசிட் பாஸ்கள் கிடைக்கும். தொடக்கத்தில், லிட்டில் இந்தியாவுக்கு 30,000, ஜூரோங் ஈஸ்டுக்கு 20,000, கெயிலாங் செராய் மற்றும் சைனாடவுனுக்கு தலா 15,000 பாஸ்கள் வழங்கப்படும்.

ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிங்கப்பூரில் உள்ள மற்ற இடங்களுக்குச் சென்றால் அவர்களுக்கு பாஸ் தேவையில்லை.

வாரநாட்கள், சனிக்கிழமைகள் அல்லது பொது விடுமுறை நாட்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரபலமான இடங்கள் உட்பட சமூகப் பகுதிகளுக்குச் சென்றால் பாஸ் தேவையில்லை என்று MOH தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் exit pass-க்கு விண்ணப்பிக்கலாம். அனைத்து தொழிலாளர்களும் ART எடுக்காமலோ அல்லது வெளியேறும் அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காமலோ எந்த நேரத்திலும் பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்லலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts