TamilSaaga

உங்கள் திறமைக்கு தீனி போடும் வாய்ப்பு.. உங்களுக்கு “இந்த” தகுதி இருந்தா போதும்.. ஏஜெண்ட்டுக்கு ஒரு பைசா கொடுக்கத் தேவையில்லை.. Apply செய்வது எப்படி?

Foundit.. பலருக்கு அதிகம் தெரியாத ஒரு “உதவும் கரம்” என்று சொல்லலாம், அது ஏன் உதவும் கரம்? ஏஜெண்ட்டுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் வேலைக்கு வர முடியுமா? எனினும், அப்படி பணம் கொடுக்கலாம் வேலைக்கு Foundit உதவுகிறது என்றால், இதனை அப்படி குறிப்பிடலாம் தானே!

ஆம்! உங்கள் படிப்பையும், திறமையையும் வைத்து உங்களுக்கு வேலை பெற்றுத் தர உதவும் “Trending Website” தான் இந்த “foundit.

இதில் அப்ளை செய்வது எப்படி?

முதலில் சிங்கப்பூரில் என்ன வேலைக்கு போக வேண்டும்? என்ன மாதிரியான துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

பிறகு, அதற்கேற்ப உங்களது Resume-ஐ தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது https://www.foundit.sg/ என்ற வெப்சைட் லிங்கை உங்கள் மொபைலிலோ அல்லது கம்பியூட்டர் / லேப்டாப்பிலோ ஓபன் செய்யுங்கள்.

அதில், மொத்தம் மூன்று ஆப்ஷன் கேட்கப்பட்டிருக்கும்,

  • Search by job title / role
  • Location
  • Experience

இதில், Search by job title / role என்ற ஆப்ஷனில், நீங்கள் என்ன வேலைக்கு அப்ளை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதனை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, “Pipeline Engineer” வேலைக்கு அப்ளை செய்ய வேண்டுமெனில், அதனை டைப் செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Location-ல் “Singapore” என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.

கடைசியாக, Experience என்ற இடத்தில், உங்கள் முன் பணி அனுபவம் இருந்தால் குறிப்பிடலாம் அல்லது ‘0 Years’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

இந்த மூன்று ஆப்ஷன்களையும் நீங்கள் நிறைவு செய்த பிறகு, அருகில் இருக்கும் “Search” பட்டனை க்ளிக் செய்தால், இந்த நிமிடம் சிங்கப்பூரில் “Pipeline Engineer” வேலைக்கு எந்தெந்த கம்பெனியில் எத்தனை Vacancy உள்ளது என்ற அனைத்து தகவல்களும் கிடைத்துவிடும்.

அதில், உங்களுக்கு எந்த கம்பெனிக்கு அப்ளை செய்ய விருப்பமோ, அதனை க்ளிக் செய்தால், அந்த குறிப்பிட்ட வேலைக்கான Job Descriptions, Role, Function, Salary என்று அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் அனைத்து தகவல்களையும் கவனமாக படித்துவிட்டு, நீங்கள் அப்ளை செய்ய விரும்பும் வேலைக்கு அருகே உள்ள “Apply Now” என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் Resume-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பிறகு, சம்பந்தப்பட்ட கம்பெனியின் சார்பில் உங்களுக்கு ஒரு வாரத்தில் இருந்து இரண்டு வாரத்திற்குள் HR அதிகாரி மூலம் அழைப்பு வரும். பிறகு, அடுத்தடுத்த நேர்காணல்களுக்கான விவரங்களை அவர்களே உங்களிடம் தெரிவிப்பார்கள்.

இதில், மிக முக்கியமான விஷயம் என்னவெனில், foundit தளத்தில் SignUp செய்யும் பொழுது, உங்கள் மின்னஞ்சலையோ அல்லது உங்கள் மொபைல் நம்பரையோ நீங்கள் Verify செய்ய வேண்டும். அப்போதுதான், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் நீங்கள் அப்ளை செய்யும் வேலைக்கான விண்ணப்பத்தை பார்க்க முடியும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts