TamilSaaga

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கு முக்கிய அறிவிப்பு – இனி 7 நாட்கள் quarantine-ல் இருக்க வேண்டிய அவசியமில்லை!

SINGAPORE: முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூர் வந்தடைந்தவுடன் ஏழு நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதுகுறித்து, இன்று (ஆக.24) சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் பல அமைச்சக பணிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், Long-term pass வைத்திருப்பவர்கள் மற்றும் முழுமையாக தடுப்பூசி போடாத 13 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட short-term visitorsகளுக்கான Entry approval விண்ணப்பத் தேவைகளும் அதே நேரத்தில் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையாக தடுப்பூசி போடாத பயணிகளுக்கான 7 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை நீக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட பயணிகள் அந்த தனிமைப்படுத்தலுக்கு பிறகு எடுக்கும் PCR சோதனையையும் இனி எடுக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க – உழைப்பு மட்டுமே முதலீடு.. சிங்கப்பூரின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள தமிழன் “ராமமூர்த்தி” – சிங்கைக்கே அடையாளமாக மாறிய “சென்னை ட்ரேடிங் சூப்பர்மார்ட்”

அதேசமயம், முழுமையாக தடுப்பூசி போடப்படாத பயணிகள், வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்குள் எடுக்கப்படும் pre-departure test-ல் நெகட்டிவ் என்ற ரிசல்ட் பெற்றிருக்க வேண்டும்.

சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன்பு எடுக்கப்படும், pre-departure test என்பது PCR சோதனையாக இருக்கலாம், professionally administered antigen rapid test (ART) டெஸ்ட்டாக இருக்கலாம் அல்லது licensed Singapore providers self-administered ARTs-களாக இருக்கலாம்.

அதேசமயம், முழுமையாக தடுப்பூசி போடாத short-term visitors சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலத்தை ஈடுகட்ட கோவிட்-19 travel insurance வாங்கும் நடைமுறை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts