TamilSaaga

சிங்கப்பூரின் “மைனர் குஞ்சு”… தெரிந்தே தவறு செய்துவிட்டு கத்தை கத்தையாக “Fine” கட்டி தப்பிக்கும் Costly women… இந்திய பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்!

SINGAPORE: இந்த செய்தியின் மேலே நீங்கள் பார்க்கும் புகைப்படத்தில் உள்ள பெண்ணின் பெயர் Connie Soh. வயது 47. சிங்கப்பூரைச் சேர்ந்த இப்பெண், யாரையாவது வம்பிழுப்பது, மனரீதியாக காயப்படுத்துவது. இஷ்டத்துக்கு கையை ஓங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு சுமார் 10.25 மணியளவில், ஹவ் பர் வில்லா (Haw Par Villa) எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில், பஸ்ஸில் தனது அருகில் உட்கார முயற்சித்த பெண்ணை தடுத்து, இவர் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அருகில் அமர முயற்சித்த பெண் ஒரு இந்தியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று, சிங்கப்பூர் பேருந்து சேவை எண் 51-ல் இப்பெண் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது இருக்கைக்கு பக்கத்து இடம் காலியாக இருந்ததால், இந்திய பெண் ஒருவர் உட்கார வந்த போது, அவருடைய கையை தட்டிவிட்டு, பக்கத்தில் உட்கார வேண்டாம் என்று கூறியதாக Connie Soh மீது குற்றம் சுமத்தப்பட்டது.

மேலும் படிக்க – குளியலறை.. கழிப்பறை.. பெட்ரூம்…! சிங்கப்பூரில் ‘அம்மாஞ்சி’ முகத்துடன்.. அப்பாவி சிறுவர்களை நாசம் செய்த உதவியாளர்! – 42 ஆண்டுகள் சிறை, 24 சவுக்கடியில் ‘பின்பக்க’ தோலை உரிக்க உத்தரவு!

இவ்விரு பெண்களும் வெஸ்ட் கோஸ்ட் ரோடு அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசிக்கின்றனர். பேருந்தில் இருந்து இறங்கி அங்கு சென்ற பிறகு, இந்திய பெண்ணை மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். குறிப்பாக, இனரீதியாக காயப்படுத்தி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட, Connie Soh மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆக.23) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், அப்பெண்ணுக்கு இன்றே தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பூட்டிய அறைகளுக்குள் நடந்த இந்த விசாரணையில், என்ன நடந்ததோ தெரியவில்லை, வழக்கு அக்டோபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Connie Soh இப்போது 5000 சிங்கப்பூர் டாலர் செலுத்து Bail வாங்கி இப்போது வெளியில் இருக்கிறார். இன்றே தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது.

நாம் முன்பே சொன்னது போல, Connie Soh சாதாரண லேடி அல்ல. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ம் சிங்கப்பூர் MRT ரயிலில் இவர் பயணித்த போது, எட்டு வயது சிறுமி இவரது காலை தெரியாமல் மிதித்துவிட்டார். உடனே கோபப்பட்ட Connie Soh, அந்த சிறுமியின் முகத்தில் ஓங்கி அறைய, அந்த பெண்ணுக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதுவும், பெற்ற தாய் முன்னிலையிலேயே அந்த சிறுமியை அறைந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த சிறுமி பலமுறை மன்னிப்பு கேட்டும் இவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதாவது ஒரு வன்முறையில் ஈடுபட்டு, பிறகு அபராதம் செலுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில், ‘மைனர் குஞ்சு’ என்ற காமெடி கதாபாத்திரம், ‘ஒவ்வொரு முறையும் தவறு செய்துவிட்டு அதற்கு ஈடாக பணத்தை கொடுப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் அதற்கு ‘அட்வான்ஸ் பேமெண்ட் பண்ணி தவறு செய்வீங்களா’ என்று கேட்டு தண்டிப்பார். அப்படி சிங்கப்பூரின் மைனர் குஞ்சாக தான் Connie Soh-வும் வலம் வருகிறார்.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts