‘கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை’ என்று ஒவையார் பாடியிருக்கிறார். இளமையில் வறுமை கொடுமை என்றாலும், இன்றைய காலக்கட்டத்தில், இளமையில் வேலை கிடைக்காமல் இருப்பதே கொடுமை எனலாம்.
படித்து முடித்தவுடன் வேலை கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம்… அதிலும் படிப்புக்கேற்ற வேலை என்பது அதைவிட பெரிய விஷயம். எப்படியோ ஒருவழியாக அடித்துப் பிடித்து ஒரு வேலையில் சென்று உட்கார்ந்துவிட்டால், பிறகு அதை தக்க வைப்பது மிகப்பெரிய விஷயம்.
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் தான் நம்ம பசங்க வாழ்கிறார்கள். அப்படி கிடைத்த வேலையை நன்றாக செய்து, முதல் மாத சம்பளம் வாங்கி, வீட்டுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக இருக்கும்.
அப்படி இங்கு ஒரு இளைஞர், தனது முதல் சம்பளத்தில் வீட்டிற்கு சர்பிரைஸ் கொடுத்து அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளார். அதில் அந்த இளைஞர், வெளியூரில் தான் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து கிளம்பி, வீட்டிற்கு சென்று அனைவருக்கும் சர்பிரைஸ் கொடுத்தது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
அதில், தன் தங்கைக்கு அவள் நீண்ட நாட்களாக பெற்றோர்களிடம் அடம் பிடித்து கேட்ட Guitar-ஐ, ஒரு அண்ணனாக தனது முதல் மாத சம்பளத்தில் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த பரிசை பார்த்ததும், அந்த பெண் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததை பார்க்கணுமே.. அதுதானே சந்தோஷம்.
அடுத்ததாக தனது தந்தைக்கு ஒரு ஸ்மார்ட் வாட்ச் ஒன்று வாங்கிக் கொடுக்க, மகன் சம்பளத்தில் தனக்கு கிடைத்த பரிசை நினைத்து அவருக்கு ஏக சந்தோஷம். இறுதியாக, தனது தாய்க்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுக்க, அவருக்கும் உள்ளம் குளிர, பார்க்கவே அந்த காட்சிகள் ‘கண்ணுப்படபோகுதய்யா’ மோடில் இருந்தது.
வீடியோவை பார்க்க இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க
உங்கள் வாழ்க்கையில், நீங்கள் இதுபோன்று உங்கள் முதல் மாத சம்பளத்தில் யாருக்கு என்ன வாங்கிக் கொடுத்தீர்கள் என்று நினைவிருக்கா? அப்படி இருந்தால், Comment-ல் சொல்லுங்க.