TamilSaaga

இரவில் பார்த்தால் பயத்தை தரும் சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படங்களுக்கு எப்படி ஒரு தனி ரசிகர் பட்டாளே இருக்கிறார்களோ அதே போல் சைக்கோ, கிரைம், த்ரில்லர் போன்ற படங்களை ரசிக்க தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதுப்போன்ற படங்களை கையாளும் இயக்குனர்கள் சிறிது தவறினாலும் போது நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளி விடுவார்கள். ஆனால் அவர்களை சீட்டில் 2மணி நேரம் அமர வைத்துவிட்டால் போது அந்த சைக்கோ மூவி ஹிட் தான்.

இதேபோல் தமிழில் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற சைக்கோ த்ரில்லிங் படங்கள் குறித்து இதோ ஒரு பார்வை.

இதேபோல் தமிழில் வெளிவந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற சைக்கோ த்ரில்லிங் படங்கள் குறித்து இதோ ஒரு பார்வை.

  1. ராட்சசன் சிறுவயதில் தனது அகோர உருவத்தை கேலி செய்ததால் சைக்கோவாக மாறிய ஒருவன் செய்யும் தொடர் கொலைதான் இந்த படத்தின் திரைக்கதை. ‘சிறப்பான திரைக்கதையும், கதையை நகர்த்திய விதமும் இந்த படம் ‘சைக்கோ த்ரில்லர்’ படங்களின் டாப் பட்டியலில் இணைந்துள்ளது
  2. ஊமைவிழிகள்:

1986ஆம் ஆண்டு ஆபாவாணன் கதை,வசனம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்த இன்னொரு த்ரில் படம். இந்த படமும் இளவயதில் ஒரு பெண் தன்னை ஏமாற்றிய காரணத்தால் அந்த பெண்ணின் அழகிய கண்கள் போல் உள்ள பெண்களை தேர்வு செய்து கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதை.

  1. நூறாவது நாள்:

மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம். ஆட்டோ சங்கர் உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தின் திரைக்கதை கச்சிதமாக இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் அவர்களை கொலை செய்து சுவரில் புதைக்கும் சைக்கோ கலந்த த்ரில் படம் தான் நூறாவது நாள்

  1. டிக் டிக் டிக்

கமல் நடிப்பில் வெளியான சூப்பரான த்ரில்லர் மூவி. ஒரு சைக்கோ வில்லன் இளம்பெண்களை வரிசையாக கொலை செய்வது ஏன்? என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  1. சிகப்பு ரோஜாக்கள்: சிறுவயதில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட ஹீரோ, வரிசையாக இளம்பெண்களை கொல்வதும் அதன் முடிவும் தான் இந்த படத்தின் கதை.
  2. வேட்டையாடு விளையாடு

கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் செய்யும் சைக்கோ கொலைகள் குறித்து அலசப்பட்டிருக்கும்.

சைக்கோ:

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் பெண்களுக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இரவு நேரத்தில் இந்த படத்தை பெண்கள் பார்க்க தவிர்ப்பது நல்லது.

Related posts