TamilSaaga

சிங்கப்பூரில் புக்கிட் மேரா வியூ கோவிட் கிளஸ்டர் கழிப்பறை மூலம் பரவியதா? MOH சொல்வது என்ன?

சிங்கப்பூர் புக்கிட் மேரா வியூ கொரோனா தொற்று பரவலானது கழிவறைகளின் மேற்பரப்பு மற்றும் நீண்ட வரிசை போன்றவற்றால் நடந்திருக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் இன்று (ஜீன்.18) தெரிவித்துள்ளது.

கழிவறைகள் முதலான பொதுவான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் தொற்று பரவும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என MOH மருத்துவ சேவை இயக்குனர் திரு.கென்னத் மேக் கூறியுள்ளார்.

இது ஃபோமைட் வகை பரவலாக இருக்கக்கூடும். ஃபோமைட் என்பது பொருள்களில் மிஞ்சியிருக்கும் கிருமிகளால் தொற்று பரவுதலை குறிப்பதாகும்.

“கடைகள் மற்றும் உணவு மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்கலாம் அந்த உணவு மையங்களில் உள்ள பல ஸ்டால்கள் பிரபலமானவை என்பதையும் நாங்கள் அறிவோம். இங்கு அருகிலே பணியில் இருக்கும் பலர் உள்ளார்கள் எனவே அவர்கள் தங்கள் தேவைகளுக்காக சந்தைகளுக்கு வந்து பார்வையிடுகிறார்கள். இது போன்ற சூழலில் குறைந்தது 30 நிமிடங்கள் வரிசையில் நிற்கும் நிலை உள்ளதாகவும் கருத்துக்கள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் நெருக்கமாக வரிசையில் நிற்கும் இந்த காலமானது தொற்று பரவுதலுக்கு குறிப்பிடத்தக்க காலமாக இருக்க கூடும்” என்று பேராசியர் மேக் கூறியுள்ளார்.

புக்கிட் மேரா வியூ தொற்றில் புதிதாக 17 கோவிட் வழக்குகள் இணைக்கப்பட்டதாக வியாழக்கிழமை (ஜீன்.17) MOH அறிவித்தது. இதன்மூலம் மொத்த தொற்றானது 56 ஆக உயர்ந்தது.

இந்த 56 பேரில் 21 பேர் குத்தகைதாரர்கள், ஸ்டால் வைத்திருப்பவர்கள் அல்லது பணியாளர்கள் மற்றும் 13 பேர் சந்தை அல்லது அங்காடிக்கு வந்தவர்கள் என்று அமைச்சக பணிக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் திரு.மேக் கூறுகையில் “தடுப்பூசி உங்களை பாதுகாக்கும் மற்றும் நீங்கள் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தை குறைக்கும்” என கூறினார்.

Related posts