TamilSaaga

சிங்கப்பூர் – திருச்சி.. அடுத்த ஒரு மாதத்திற்கு வழக்கத்தை விட “இருமடங்கு” அதிகரித்துள்ள விமான டிக்கெட் விலை!

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்வோருக்கு இந்த செய்தி உண்மையில் வேதனையைத் தான் கொடுக்கும். ஆம்! சிங்கப்பூர் – திருச்சி செல்லும் அனைத்து விமானங்களிலும் ஜூன் மாதம் கடைசி வரை டிக்கெட் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

இண்டிகோ, ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் என அனைத்து விமானங்களிலும் இதே நிலை தான். அதுமட்டுமின்றி, ஒருசில நாட்களுக்கு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

டிக்கெட்டின் விலை இந்திய ரூபாயின் மதிப்பில் குறைந்தபட்சம் ரூ.20,000 லிருந்து 40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக திருச்சியில் இயங்கி வரும் நந்தனா ஏர் டிராவல்ஸ் நிறுவனம் நமது தமிழ் சாகாவிடம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு அதிகமாக டிக்கெட் விலை விற்கப்படுவதற்கு காரணம், பள்ளிகளின் கோடை விடுமுறை காரணமாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றவர்கள் இப்போது இந்தியா திரும்பி வருகின்றனர். ஏனெனில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் தற்போது குடும்பம் குடும்பமாக சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பி வருகின்றனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் மற்றொரு துக்க செய்தி: பணியிடத்தில் தவறி விழுந்த வெளிநாட்டு ஊழியர் மரணம்

அதேபோல், சிங்கப்பூரில் ஜூன் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் சிங்கப்பூரில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துடன் தமிழகம் செல்ல டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். மேலும், புதிதாக Work Permit-ல் சிங்கப்பூர் செல்வோரின் எண்ணிக்கையும் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இதுவே இந்தளவு டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது வரை அதிகபட்சமாக ரூ.40,000 வரை டிக்கெட் விற்பனையாகிறது.

எனவே, இவ்வளவு அதிகமான டிக்கெட் விலையை தவிர்க்க வேண்டுமெனில், பயணிகள் முன்கூட்டியே அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் செய்வது ஒன்று மட்டுமே சிறந்த வழியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

News Source

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts