TamilSaaga

சிங்கப்பூரில் குவியும் சுற்றுலா பயணிகள்…. டிரைவர்கள் தட்டுப்பாடால் சுற்றுலா பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் ஏஜென்ட்கள்…

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவில் துணையாக இருப்பது அந்த நாட்டின் சுற்றுலாத்துறை தான். எனவேதான், உலகின் பல முன்னணி நாடுகளும் சுற்றுலாத்துறையில் அதன் முக்கிய முதலீட்டினை செலுத்தி வருகின்றது. அவ்வகையில் சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால் சுற்றுலா துறையானது அந்நாட்டின் பெரும்பலம் என்றே கூறலாம். ஏனென்றால் சிங்கப்பூரில் மக்கள் சுற்றி பார்த்து கொண்டாடுவதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

கொரோனாவிற்கு பின்பு உலக நாடுகளின் சுற்றுலாத்துறை பெருமளவு வீழ்ச்சி இழந்த நிலையில், தற்பொழுது ஓரளவிற்கு ஏற்றம் கண்டு வருகின்றது. அதேபோல் சிங்கப்பூருக்கு வரும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆனால் பயணிகளுக்கு சேவைகளை ஏஜென்ட்கள் தடுமாறுகின்றனர். சிங்கப்பூரில் சுற்றுலா பேருந்துகளுக்கு தேவையான ஓட்டுநர்கள் இல்லாததே அதற்குக் காரணமாகும்.

பள்ளி பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து டிரைவர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் சுற்றுலா பேருந்துகளுக்கான டிரைவர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் சுற்றுலாத்துறையானது ஏற்றம் காண்பது நல்ல செய்தி தான் என்றாலும், டிரைவர்கள் கிடைக்காமல் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஏஜெண்டுகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் மட்டும் சீனாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது. இந்த நிலையினை போக்க, வெளிநாடுகளில் இருந்து மேலும் பல டிரைவர்களை வேலைக்கு எடுத்தால் நல்லது என சுற்றுலா நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Related posts