TamilSaaga

இது என்ன உங்க தாத்தா போட்ட ரோடா? : சிங்கப்பூரை கலக்கும் “அதிரடி பதாதைகள்” – சட்டவிரோதமாக பார்க்கிங்செய்வோருக்கு “சவுக்கடி”

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக சட்டவிரோதமாக தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்யும் ஒரு பழக்கம் சற்று அதிகரித்து வருகின்றது என்று தான் கூறவேண்டும். கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி கூட, சிங்கப்பூர் லோர்னி சாலைக்கு அருகிலுள்ள பொது சாலையில் ஹோண்டா சிவிக் வாகனம் வைத்திருக்கும் சில ஓட்டுநர்கள் குழுவாக ஒன்றுகூடியுள்ளனர்.

புகைப்படம் எடுப்பதற்காக தங்கள் கார்களை சட்டவிரோதமாக அவர்கள் நிறுத்தியதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

“உறுதி + புத்திசாலித்தனம் + பொறுமை..” கொக்கு போல காத்திருந்தால் சிங்கப்பூரில் நாம் தடம் பதிப்பது உறுதி – இந்த வீடியோவே சாட்சி

இந்நிலையில் இதுபோன்ற தேவையற்ற பிரச்சனைகளை குறைக்க ஒரு புதிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மவுண்ட்பேட்டன் பகுதியில் குடியிருக்கும் சில குடியிருப்பாளர்கள் ஒரு புதுவித முயற்சியை தற்போது கையிலெடுத்துள்ளனர். தொண்டூழியர்களாகிய இவர்கள் 12 வித்தியாசமான வண்ணமிகு பதாதைகளை உருவாக்கியுள்ளனர்.

“இது என்ன உங்க தாத்தா போட்ட ரோடா”, “இங்க பார்க் பண்ணுங்க.. அப்படியே அபாரதத்துக்கு ஒரு ஹலோ சொல்லுங்க”. இது போன்ற 12 வித்யாசமான வாசகங்களை கொண்ட ஆங்கில பதாதைகளை தஞ்­சோங் ரூ வியூ பகுதியில் அவர்கள் அமைத்துள்ளனர். மேலும் இது மக்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது என்று தான் கூறவேண்டும். தஞ்­சோங் ரூ வியூ பகுதியில் சட்டவிரோதமாக பலர் வாகனங்களை நிறுத்தி வந்த நிலையில் இந்த பதாதைகளை வைக்கப்பட்டபிறகு அவை குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது.

சொந்த குடும்பமே தான் நேசித்த பெண்ணை தவறாய் பேச.. நம்பிக்கை வைத்து தாலி கட்டிய இளைஞர் – சிங்கப்பூரில் வேலைக் கிடைத்து இன்று ஊர் தரும் “Respect” வேற லெவல்!

“Mountbatten Parking Heroes” என்ற இந்த தொண்டூழிய அமைப்பில் 20 வயது முதல் 60 வயது வரை உள்ள தொண்டூழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூர் முழுவதும் இந்த புதிய நடவடிக்கைளை மேற்கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Content and Image Source : straitstimes.com

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts