சிங்கப்பூர்: வெஸ்ட் கோஸ்ட் கிரசென்ட்டில் (16 West Coast Crescent ) உள்ள குடியிருப்பின் கூரையில் நீர்ப்புகாப்புப் பணியைச் செய்துகொண்டிருந்த வங்கதேசத் தொழிலாளி ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிங்கையில் கடந்த மே 24ம் தேதி இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து “The Straits Times” தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “16 West Coast Crescent பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் waterproofing பணியில் ஈடுபட்டிருந்த அந்த வெளிநாட்டு ஊழியர் கால் தவறி, 20m உயரத்தில் இருந்து கீழே விழுந்திருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அந்த ஊழியர் கீழே விழுந்தவுடன் உடனடியாக National University மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், காயங்கள் கடுமையாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்” என்று The Straits Times செய்தி நிறுவனத்திடம் MOM சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊழியர் சிங்கையின் RJ Contract எனும் நிறுவனத்தின் பணியாளர் என்றும் இந்த சம்பவம் காலை 10.45 மணிக்கு நடந்துள்ளது என்றும் MOM கூறியுள்ளது.
“பொது பாதுகாப்பு நடவடிக்கையாக, ஒரு தொழிலாளி உயரத்தில் இருந்து விழக்கூடிய ஒவ்வொரு காரணத்தையும் அடையாளம் கண்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தொழிலாளர்கள் விழுவதைத் தடுக்க பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் MOM தெரிவித்துள்ளது.
சிங்கையில் ஜனவரி 1 முதல் மே 6 வரை பணியிடத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் அந்த வெளிநாட்டு ஊழியர் வங்கதேசத்தைச் சேந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.