TamilSaaga

சிங்கப்பூர் KKHல் கொரோனாவால் 3 வயது குழந்தை உயிரிழப்பா?.. மறைக்கப்பட்டதா தகவல்? – MOH விளக்கம்

KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KKH) கோவிட் -19 நோயால் மூன்று வயது குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி ஃபேஸ்புக் பதிவை சுகாதார அமைச்சகம் (MOH) நிராகரிப்பு செய்தது.

KK மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KKH) கோவிட் -19 நோயால் மூன்று வயது குழந்தை இறந்துவிட்டதாகவும், இந்த மரணம் வேண்டுமென்றே அறிவிக்கப்படவில்லை என்றும் ஆன்லைனில் பரவும் பேஸ்புக் பதிவை சுகாதார அமைச்சகம் மறுப்பதாக அறிவித்துள்ளது.

“இது முற்றிலும் உண்மைக்கு மாறானது மற்றும் ஒரு முழு புனைவு. ஆகஸ்ட் 14 வரை, கே.கே.ஹெச்-இல் கோவிட் -19 நோயால் இறந்த குழந்தை இல்லை.” என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

“வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts