திருமண வைபோகங்களில் நடக்கும் பல சுவாரசியமான சம்பவங்களை பற்றி நாம் கேளிவிப்பட்டிருப்போம், சில சமயங்களில் நேரிலும் பார்த்திருப்போம். அதேபோலத்தான் அண்டை நாடான இந்தியாவிலும் ஒரு சுவாரசியமான திருமணம் நடந்துள்ளது.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது தான் புல்தானா என்ற மாவட்டம் அங்குள்ள மல்காப்பூர் பங்கரா என்ற கிராமத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஒரு திருமண நிகழ்வு பெரியோர்களால் நிச்சியிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை 4 மணியளவில் திருமணம் நடைபெறும் என்று பெரியோர்கள் நேரம் குறித்த நிலையில் தடபுடலாக கல்யாணத்திற்கான பணிகள் நடந்துள்ளது. மாலை 4 மணிக்கு திருமணம் என்பதால் மணமகள் வீட்டார் மதியமே சத்திரத்திற்கு வந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
ஆனால் மாப்பிளையோ தனது நண்பர்களுக்கு மது பார்ட்டி கொடுத்து, தானும் நன்றாக குடித்து குதூகலித்துள்ளார். மாப்பிளை குசும்பு இருக்கவேண்டியது தான், ஆனால் பெண் வீட்டாருக்கு கோவம் வரும் அளவிற்கு நடந்துகொள்ளக்கூடாது.
மாலை 4 மணி நெருங்க நெருங்க மணப்பெண் மணக்கோலத்தில் காத்திருக்க மணி மாலை 5,6,7 என்று நீண்டுகொண்டே போக இரவு 8 மணிக்கு மணமகன் போதை தெளிந்து தனது சொந்தங்களுடன் தாலி கட்ட மண்டபத்திற்கு ஆர்பரிப்போடு வந்துள்ளார்.
உண்மையில் பெண்ணை பெற்ற எந்த தந்தையாக இருந்தாலும் இந்த நேரத்தில் சற்று நிதானித்தே செயல்படுவார்கள், அப்படி இருக்க பெண்ணின் தந்தையும் பொறுமையோடு, மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாரை வரவேற்றுள்ளார்.
ஆனால் அங்கு வந்தும் அதுசரியில்ல, இது சரியில்ல என்று மணமகன் குறைகூற, கடுப்பான பெண்ணின் தந்தை குழுமியிருந்த தனது சொந்தங்களிடம் கலந்து பேசி தனது சொந்தத்தில் இருந்த ஒரு மாப்பிள்ளையோடு தனது பெண்ணுக்கு திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
நீ இப்போவே இந்த ஆட்டம் ஆடுற, என் பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைத்தால் நிச்சயம் அவள் வாழ்க்கை நல்லபடியாக இருக்காது என்று கூறி அந்த மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டாரை அங்கிருந்து அனுப்பியுள்ளார்.
உண்மையில் தந்தைகளுக்கு அவர்களின் பெண் குழந்தைகள் மீது உள்ள பாசம் தனிதான்.