TamilSaaga

வெளிநாட்டில் வேலைப் பார்த்தாலும்.. காதல் விஷயத்தில் தீயாய் செயல்பட்ட இளைஞர் – 8000 கி.மீ கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வந்து தாலிக் கட்டிய “வைராக்கியம்” – வெட்கத்தில் சிவந்த நைஜீரிய பெண்

தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபாத் பள்ளி வெங்கடாஜலபதி தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் திருமால் பிரசாத். வயது 28. இவர் ஜெர்மனியில் வேலை செய்து வருகிறார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள மல்டிநேஷ்னல் நிறுவனத்தில் வேலைப் பார்த்த போது, பணி நிமித்தமாக அடிக்கடி நைஜீரியா சென்று வந்தார்.

அப்போது, நைஜீரியாவின் லாகோஸ் நகரைச் சேர்ந்த 25 வயதான பட்ரிசியா இஃயின் எஜே என்ற பெண் மீது காதல் வயப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு, அப்பெண்ணிடம் வெளிப்படையாகவே அவர் தனது காதலைத் தெரிவிக்க, பட்ரிசியாவும் அதனை அன்போடு ஏற்றுக் கொண்டார். இருவரும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர்.

பிறகு, மீண்டும் ஜெர்மனிக்கே திருமால் பிரசாத் திரும்பிய பிறகு, இருவரது அன்பும், காதலும் இன்னும் அதிகரிக்க, இனிமேலும் பொறுக்க வேண்டாம் என்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். நாடு விட்டு நாடு கடந்த தங்கள் காதலை, பெற்றோரிடமும் இருவரும் தெளிவாக எடுத்துரைத்தனர். தங்கள் காதலின் ஆழத்தையும் புரிய வைத்தனர்.

இருவருக்கும் கைநிறைய சம்பளம், நல்ல எதிர்காலம் என்பதால் இருவரது பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… InspIRRE இல் உள்ள புதிய கடையில் அனைத்து பொருட்களும் இலவசம்! உடனே பெறலாம்!

இதையடுத்து, ஹிந்து’ முறைப்படி திருமால் பிரசாத் – பட்ரிசியா திருமணத்துக்கான ஏற்பாடுகள் வாலாஜாபேட்டையில் சிறப்பாக நடைபெற்றது. வாலாஜாபேட்டை அல்லிக்குளம் பகுதியிலிருக்கும் திருமண மண்டபத்தில் கல்யாணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கைகளில் மெஹந்தி, வளையல்கள், பட்டுப்புடவை சகிதம் பக்காவாக தமிழ் முறைப்படி, காதலி பட்ரிசியா கழுத்தில் தாலி கட்டி தனது மனைவியாக்கினார் திருமால் பிரசாத்.

கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் ‘தமிழ்நாட்டின் மருமகளே! என்று வரவேற்க, வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் புதுமணத்தம்பதி தங்கள் முறைப்படி பதிவு செய்தனர்.

கூடியிருந்த உறவினர்களும், நண்பர்களும் மலர்த்தூவி இருவரையும் வாழ்த்தினர். மணக்கோலத்திலிருந்த பட்ரிசியாவைப் பார்த்து, ‘தமிழ்நாட்டின் மருமகளே!’ என்றும் அவரை ஆசையோடு வரவேற்று மகிழ்வித்தனர். இதையடுத்து, வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts