TamilSaaga

சிங்கப்பூரில் திருமண விழாக்களுக்கு 250 பேர் வரை அனுமதி – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

சிங்கப்பூர் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து நேற்று சில தளர்வுகளை அமைச்சுகளுக்கான பணிக்குழு அறிவித்தது. ஜூலை 12 ஆம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

திருமண விழாக்கள்
சிங்கப்பூரில் திருமண விழாக்களில் இனி 250 பேர் வரை கலந்துகொள்ளலாம். விழாவிற்கு வரும் நபர்கள் அதற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல் .

உணவகங்களில் தளர்வு வருகின்ற ஜீலை.12 முதல் உணவகங்களில் 5 பேர் கொண்ட குழுவாக மேசையில் அமர்ந்து உண்ணலாம். சமூக இடைவெளி பின்பற்றி குழுவாக உண்ண அனுமதி. அவ்வாறு உணவு உண்பவர்கள் தகுந்த சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இரண்டு மேசைகளுக்கு இடையே ஏற்கனவே கூறியுள்ள வழிமுறைப்படி 3 மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும். உணவு உண்ணும் நேரத்தை தவிர்த்த பிற நேரங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.

பணியிடங்களில் தளர்வு பணியிடங்களில் மீண்டும் சமூக கூட்டங்களை நடத்தலாம். இது போன்ற கூட்டங்களில் பங்கு பெறவும் 5 பேர் வரை அனுமதி அளித்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்ற வலியுறுத்தபட்டுள்ளது.

சிறிய கடைகளிலும் SafeEntry Gateway சிங்கப்பூரில் உள்ள பெரிய கடைகள், சூப்பர் மார்கெட் மற்றும் மால்களில் உள்ளிருக்கும் சிறிய கடைகளிலும் TraceTogether-only SafeEntry, SafeEntry Gateway பதிவு முறையானது மீண்டும் பின்பற்றப்படும் என அமைச்சுகளுக்கான பணிக்குழு அமைப்பு இன்று அறிவித்துள்ளது இந்த மாதம் 21 ஆம் தேதி முதல் இந்த பதிவு முறையை கட்டாயமாக செயல்படுத்த பெரிய கடைகளுக்கு உள்ளிருக்கும் சிறிய கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts