TamilSaaga

“சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்” : ஆண் நடனப் பயிற்றுவிப்பாளர் மீது குற்றச்சாட்டு – பிரம்படி கிடைக்க வாய்ப்பு

சிங்கப்பூரில் ஆண் நடனப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் வெவ்வேறு தொடக்கப் பள்ளிகளில் உள்ள இரண்டு 10 வயது சிறுவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 41 வயதாகும் சிங்கப்பூர் நபர், கடந்த 2016 முதல் கடந்த ஆண்டு வரை ஐந்து முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஆணின் அடையாளத்தையும், பள்ளிகள் மற்றும் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும், GAG ஆர்டர் காரணமாக வெளியிட முடியாது என்று நீதி மன்றம் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை (நவம்பர் 8) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த கல்வி அமைச்சகம் (MOE) அந்த நபர் அதன் பயிற்றுவிப்பாளர்களின் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் இனி எந்தப் பள்ளியிலும் அவர் பணியில் ஈடுபடவில்லை என்றும் கூறியது.

மேலும் இதுகுறித்து அதன் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது : மாணவர்களுக்கு பாதுகாப்பான கற்றல் சூழலை வழங்குவதில் MOE உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். “எங்கள் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை கவனத்தில் கொண்டு பயிற்றுவிப்பாளர்களை MOE தீவிரமாகப் கண்காணிக்கிறது மற்றும் அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்றும் கூறினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பள்ளிகளில் அவர்களின் சேவைகளை வழங்குவதில் இருந்து நிரந்தரத் தடை விதிக்கப்படும்.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும், ஒரு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

Related posts