TamilSaaga

சிங்கப்பூர்.. தலையில் Steel Beam விழுந்து தொழிலாளர் பலி – சிங்கையில் ஒரே நாளில் இறந்த “2 வெளிநாட்டு ஊழியர்கள்” – ஏப்ரல் மாதத்தில் மட்டும் 7 பேர் பலி

சிங்கப்பூரில் வங்கதேசத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை (ஏப்ரல் 27) மரணமடைந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு இரும்பு
தூணை அவர் இடமாற்றம் செய்துகொண்டிருந்தபோது அது அவர் தலையில் விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 49 வயதான ஒருவர், மரணத்தை ஏற்படுத்திய ஒரு மோசமான செயலுக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை பின்னர் கூறியது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி தமிழக ஊழியர் சண்முகம் இறந்தே அதே நாளில் இந்த ஊழியரும் இறந்துள்ளார்.

ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த MOM, 42 வயதான அந்த தொழிலாளி பூன் லேயில் உள்ள 7A நெய்தல் சாலையில் எஃகு தூண்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்று கூறியது.

பல கனவுகளோடு வெளிநாடு சென்ற தமிழக தொழிலாளர்.. எதிர்பாராத வகையில் உயிரிழந்த பரிதாபம் – பல நல்ல உள்ளங்கள் உதவியால் திருச்சி வந்தடைந்த உடல்!

சம்பவத்தின்போது அந்தத் தொழிலாளி எஃகுக் தூண்களில் ஒன்றை தூக்கும் கருவியில் CLAMP ஒன்றை மாட்டிக்கொண்டு இருந்ததாகவும். அப்போது ​​அது திடீரென அவரை நோக்கி கவிழ்ந்து தலையில் பலமாக மோதியதாகவும் MOM தெரிவித்தது.

Exclusive : காலை 10 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் – இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கிய அவலம் – மலேசியா வரை சென்று வந்த பயணிகள்!

ஏப்ரல் 27ம் தேதி மதியம் 1.55 மணியளவில் உதவிக்காண அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்தபோது ஒரு தொழிலாளி அசைவில்லாமல் இருப்பதைக் கண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் உறுதி செய்தார்.

இந்த சம்பவம் குறித்து ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மேற்கொண்டு விசாரணைகள் நடந்து வருகின்றது என்று போலீசார் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts