TamilSaaga

சிங்கப்பூர் சூன் லீ சாலை.. எழுத்துப்பிழையோடு வைக்கப்பட்ட பதாதைகளை – “தமிழக புலம்பெயர் தொழிலாளிகளிடம்” பகிரங்க மன்னிப்பு கேட்ட MWC

சிங்கப்பூர் சூன் லீ சாலையில் உள்ள MWC எனப்படும் (Migrant Workers Centre recreation club) புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம், அதன் பொழுதுபோக்கு கிளப்பைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பலகைகளில் உள்ள பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டுள்ளது.

வங்காளதேச தொழிலாளி ஒருவர் தனது தாய்மொழியில் பல தவறான எழுத்துப்பிழைகள் உள்ளதை சுட்டிக்காட்டியதையடுத்து MWC இந்த மணிப்பினை கேட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த பதாதைகளில் தமிழ் மொழியிலும் எழுத்துப்பிழை இருந்ததால் அதற்கும் MWC மன்னிப்பு கேட்டுள்ளது.

ஆங்கிலம், சீனம், தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வைக்கப்பட்டிருக்கும் பதாதைகளை “தொழிலாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை உள்ளே சாப்பிட அனுமதி இல்லை என்பதை குறிப்பதாகும்”.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. 3 மாத கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு விபத்தில் உயிரிழந்த நபர் – உங்களால் முடிந்த சிறு உதவி தேவை!

பெங்காலி மட்டுமல்லாமல் தமிழில் எழுதப்பட்ட எழுத்துக்களும் எழுத்துப்பிழையோடு இருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் MWC ஊடகங்ளுக்கு அளித்த தகவலில், அந்த எழுத்து பிழைகளை விரைவில் சரிசெய்வோம் என்று கூறியுள்ளது.

MWCன் நிர்வாக இயக்குனர் பெர்னார்ட் மேனன் பேசும்போது : “குறியீடு உண்மையில் சரியாக இருந்தபோதிலும், அது சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை, மேலும் தமிழ் மற்றும் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

சிங்கப்பூர் Marina Boulevard சாலை.. நடுரோட்டில் தனியே சென்ற சிறுமி – நொடிப்பொழுதில் “ரியல் லைப் ஹீரோவாக” மாறிய SBS ஓட்டுநர்

MWC அதன் விற்பனையாளர்கள் மற்றும் மொழிகளை நன்கு அறிந்த பணியாளர்களுடன் இணைந்து, இந்த பலகைகளை வைப்பதற்கு முன் மொழிபெயர்ப்புகள் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

ஏற்கனவே இது போன்ற சில மொழிபெயர்ப்பு பிரச்சனைகள் சிங்கப்பூரில் பரவலாக நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக இருக்கும் தமிழில் பிழைகளோடு இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவை கண்டறிந்து உடனடியாக திருத்தப்படுகிறது என்பது தான் உண்மை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts