தமிழ் சினிமாவில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான “ஜோடி” என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சூர்யா நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான “மௌனம் பேசியதே” என்ற படமே த்ரிஷாவை தமிழ் திரை உலகிற்கு தனிமைப்படுத்தி கட்டியது. மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களில் திரிஷா தமிழ் திரையுலகின் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தார்.
2004ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான “கில்லி” திரைப்படத்தில் “தனலட்சுமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் புகழ் பெற்றார் திரிஷா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், சூர்யா மற்றும் விக்ரம் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2010ம் ஆண்டு வெளியான “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படம் 90ஸ் கிட்ஸ் மனதில் திரிஷாவை நீங்காத இடம் பிடிக்கச் செய்தது. அன்று தொடங்கி இன்று வரை திரிஷா தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்துடன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தற்போது இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன், ராம், கர்ஜனை, சதுரங்க வேட்டை பாகம் 2 மற்றும் ராங்கி ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் திரிஷா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி அன்று த்ரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வருண் மணிஎன்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அனால் அதனையடுத்து அந்த 2015ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, இந்த ஜோடி தங்கள் நிச்சயதார்த்தம் முறிவுபெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் நெருங்கிய நண்பர்கள் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்றும். ஆகையால் புதிய திரைப்படங்களை ஏற்பதில் இருந்து சற்று விலகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஆனால் இந்த திருமண நிகழ்வு குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.