TamilSaaga

இதோ நமது “தமிழ் சாகா”-வின் “Beast” Contest வெற்றியாளர் – இன்று காலை சிங்கப்பூர் Carnival Cinemas-ல் 11 மணி ஷோ ரெடி!

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், உலகம் முழுவதும் “Beast” திரைப்படம் இன்று ரிலீசாகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் அபார வெற்றிக்கு பிறகு, நெல்சன் இயக்கியிருக்கும் ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது பீஸ்ட்.

நமது சிங்கப்பூரிலும் இன்று பல தியேட்டர்களில் பீஸ்ட் ரிலீசாகிறது. இந்நிலையில், நம் “தமிழ் சாகா” பீஸ்ட் படத்திற்கான சிறப்பு Contest-ஐ நடத்தியது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் கவனத்திற்கு.. 3 மாத கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு விபத்தில் உயிரிழந்த நபர் – உங்களால் முடிந்த சிறு உதவி தேவை!

இதில், சிங்கப்பூரில் பணிபுரியும் “ஜெயசீலன்” என்ற தமிழ் சாகா வாசகர் வெற்றிப் பெற்றுள்ளார். இதை முன்னிட்டு, அவருக்கு சிங்கப்பூர் Carnival Cinemas திரையரங்கில் இன்று காலை 11 மணி காட்சிக்கான டிக்கெட் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

RRR படத்தைத் தொடர்ந்து இப்போது பீஸ்ட் படத்துக்கும் ஸ்பெஷல் CONTEST மூலம், வெற்றிப் பெற்ற தமிழ் சாகா வாசகர்களுக்கு டிக்கெட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Carnival Cinemas-ல் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு நமது தமிழ் சாகா முகநூல் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts