சிங்கப்பூரில் உள்ள ஆயிரக்கணக்கான இந்து மற்றும் முஸ்லீம் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் வரும் புனித ரமலான் மற்றும் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் snacks மற்றும் பண்டிகை விருந்துகளைப் பெற உள்ளார்கள்.
ஏப்ரல் 11 அன்று, வெளிநாட்டு தொழிலாளர்களில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் Dormitories-களில் சுமார் 70,000 பேரிச்சம்பழங்கள் விநியோகிக்கப்பட உள்ளது.
அதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களில் ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் Dormitories-களில் ஏப்ரல் 14 அன்று முறுக்கு மற்றும் லட்டு போன்ற சுமார் 5,000 ஸ்நாக்ஸ் மற்றும் இனிப்புகள் வழங்கப்படும்.
நோய்த் தொற்றுக்கு மத்தியில் ஹிந்து மற்றும் முஸ்லீம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை நிலைநாட்ட, இந்து அறநிலைய வாரியத்தின் (HEB) முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த பரிசு விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் பேரீச்சம்பழம் சாப்பிட்டு நோன்பு திறப்பது அவர்களின் பாரம்பரியமாகும்.
ஏப்ரல் 17 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு HEB சார்பில் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட 2,500 பெண்டோ (bento) மதிய உணவுப் பெட்டிகள் மற்றும் 1,000 சிறப்புப் புத்தாண்டு இனிப்புகள் மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட உள்ளது.
Community Seva – இது உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்யும் திட்டங்களை வழங்கும் HEB இன் ஒரு பிரிவாகும் – புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பரிசுகளை விநியோகிக்கும் முயற்சியின் ஒரு அமைப்பாக இது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், இது சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் Assurance, Care and Engagement குழுவுடன் இணைந்து செயல்படும்.
“நற்பணி பேரவை“யின் தன்னார்வத் தொண்டர்கள் – மக்கள் சங்கத்தின் இந்திய செயல்பாட்டுக் குழுக்கள் கவுன்சில் – மதிய உணவுப் Boxes மற்றும் பண்டிகை விருந்துகளை விநியோகிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.