TamilSaaga

“சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்” : பாதுகாப்புடன் நடந்து முடிந்தது இந்த ஆண்டு தீமிதி திருவிழா

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்து பக்தர்களை ஈர்க்கும் தீ மிதிக்கும் திருவிழா, இந்த ஆண்டு பெருந்தொற்று பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் காரணமாக பங்கேற்கும் மக்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள கோவிலில் நடந்த தீ மிதி திருவிழாவின் போது வெறுங்காலுடன் தீமிதி திருவிழாவில் பங்கேற்கும் 950 பக்தர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது நிகழ்வுக்கு முந்தைய சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பால்குடம் மற்றும் அங்கபிரதக்ஷணம் போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய சடங்குகள் அக்டோபர் முதல் வார இறுதியில் இருந்து நடைபெற்றன. பாதுகாப்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருக்க வேண்டியிருந்தது, மேலும் நிகழ்வுக்கு முந்தைய சடங்குகளுக்காக தண்ணீர் தெளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு பங்கேற்க பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று முன்பே அறிவுறுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டாலும், பொதுமக்கள் பங்கேற்காமல், மதச் சடங்குகளில் அத்தியாவசிய நபர்கள் மட்டுமே ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து அறநிலைய வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், தீமிதி திருவிழாவின்போது தீக்குழியில் சென்ற பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும். தீக்குழியில் செல்வதால் அந்த முகக்கவசத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் முகக்கவசம் அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சனைகளை கொண்டு வரலாம் என்றும் அவர் கூறினார். தீமிதி சடங்கை முடித்தவுடன் அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts