TamilSaaga

சிங்கப்பூரில் சிக்கிக்கொண்ட கணவர்.. தாயகத்தில் கருவோடு காத்திருந்த மனைவி : ஏர்போர்ட்டில் குடும்பத்தினர் முன் மண்டியிட்டு அழுத ஊழியர்

சிங்கப்பூர் மலேசிய எல்லைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் தற்போது சிரமமின்றி எல்லைகளை கடந்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் கழித்து மக்கள் இந்த பயணங்களை மேற்கொள்வதால் பல நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களும் நடந்து வருகின்றது. அந்த வகையில் மலேசியாவைச் சேர்ந்த ஒருவர், சிங்கப்பூரில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் மண்டியிட்டு இறைவனுக்கு கண்ணீர்மல்க நன்றி சொன்ன காட்சி தற்போது பலரை கண்கலங்க வைத்துள்ளது.

4 வருடங்கள் கழித்து.. முதன் முறையாக அறிவிக்கப்பட்ட “SERS” திட்டம்.. கண்ணீருடன் வெளியேறும் 600 குடும்பங்கள் – வீட்டின் மேல் வைத்த அளவுக்கடந்த பாசம்!

இறைவனுக்கு நன்றி சொன்னதையடுத்து தனது மனைவியை ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார் அவர். சிங்கப்பூரில் சுமார் 1.5 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிலையில் அவர் சிங்கப்பூர் வந்தபோதுதான் தனது மனைவி இரண்டாவது முறை கர்பம் தரித்துள்ளது அவருக்கு தெரியவந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தி அறிந்த அவர் மீண்டும் மலேசியா செல்ல நினைத்தபோது எல்லைகள் கட்டுப்பாடுகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆனா பிறகும் நான் என் குழந்தையை தொட்டுகூட பார்க்கமுடியாத நிலையில் இருந்தேன். அதன் பிறகு கடந்த ஏப்ரல் 1ம் தேதி எல்லைகள் திறக்கப்பட்டபோது தான் ஓடோடி வந்து என் மனைவியையும் இரண்டாவது குழந்தையையும் பார்த்தேன் என்று அவர் கூறியுள்ளார். தனது குட்டி மகளை கண்டதும் கண்ணீர் பீறிட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

கைகளில் கூர்மையான ஆயுதம்.. இரக்கமில்லா தாக்குதல்.. இரத்தம் வழிய ஓடும் நபர் – Boon Lay Drive பகுதியை இன்று மிரள வைத்த “சம்பவம்”

அவருடைய மகனும் தந்தையை சுமார் 2 ஆண்டுகளாக காணாத நிலையில் விமான நிலையத்தில் தனது தந்தையை பார்த்ததும் துள்ளிக்குதித்து தன் தந்தையை ஆரத்தழுவி கொண்ட காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இதுபோன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் சிங்கப்பூர் மாற்று மலேசிய எல்லைகளில் அனுதினமும் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts