TamilSaaga

“மாஸ்க்கை கழட்டி வீசியெறிங்க” – சிங்கப்பூரில் உள்ளூரில் தளர்வடையும் சில கட்டுப்பாடுகள் – வெளிநாட்டு ஊழியர்களை கையெடுத்து கும்பிட வைத்த பிரதமர் லீ-யின் அறிவிப்பு

இன்று காலை சரியாக 11 மணியளவில் நமது சிங்கப்பூர் பிரதமர் லீ தனது முகநூல் வழியாக நாட்டு மக்களிடம் பெருந்தொற்று குறித்து உரையாற்றினார். சிங்கப்பூர் இந்த தொற்றுக்கு எதிரான போரில் நல்ல முறையில் எதிர்த்துபோராடியுள்ளது என்று கூறினார். இதனையடுத்து வெளிநாட்டு பயணிகளுக்கு மாபெரும் நிம்மதியாக பல எல்லை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அவர் கூறினார். இதுஒருபுரம் இருக்க உள்ளூரிலும் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை பிரதமர் அறிவித்துள்ளார். அவர் பின்வருமாறு.

Exclusive : “என் மகனை இன்னும் தொட்டுகூட பார்க்கல.. குற்ற உணர்ச்சி என்னை குத்துது” – சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக தொழிலாளியின் வேதனை!

10 பேர் வரை ஒன்றுகூடலாம்

வரும் மார்ச் 29ம் தேதி முதல் பொது இடங்களில் ஒன்றுகூடும் மக்களின் குழு அளவு வரம்புகள் 10 பேர் வரை நீட்டிக்கப்படும் என்று கூறினார். முன்னதாக இந்த அளவு 5 பேர் என்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mask அணிவது அவசியமா?

வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) முதல் வெளிப்புற அமைப்புகளில் (அதாவது பொதுவெளியில்) முகமூடிகள் கட்டாயமில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Work From Home

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும். பெரிய நிகழ்வுகள் மற்றும் 1,000 பேருக்கு மேல் உள்ள நிகழ்ச்சிகளுக்கான திறன் வரம்புகள் 75 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொது வெளியில் தொற்று பரவும் ஆபத்து கணிசமாகக் குறைகிறது என்பதால், வெளியில் முகமூடிகளை அணிவது மக்களின் விருப்பம் என்றும் ஆனால் உட்புற நிகழ்வுகளில் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

மேலும் பிரதமர், சிங்கப்பூரின் அதிக அளவிலான தடுப்பூசி விகிதத்தை சுட்டிக்காட்டினார் – சிங்கப்பூரில் தடுப்பூசி போட தகுதியான மக்கள் தொகையில் சுமார் 95 சதவீதம் பேர் முழு தடுப்பூசி முறையை முடித்துள்ளனர் என்றும், மேலும் மொத்த மக்கள்தொகையில் 71 சதவீதம் பேர் பூஸ்டர் ஷாட்களை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Big Breaking : அனைத்து தடைகளும் நீங்கியது – தடுப்பூசி போட்ட எல்லா இந்திய பயணிகளும் தனிமைப்படுத்தலின்றி சிங்கப்பூர் வரலாம்

பெருந்தொற்று வழக்குகளின் எண்ணிக்கை மார்ச் 1 அன்று 24,000க்கும் அதிகமாக இருந்த நிலையில் சமீபத்திய நாட்களில் அது 10,000 ஆக படிப்படியாகக் குறைந்துள்ளது. விரைவில் இந்த தொற்று நீங்கி மீண்டும் பழைய நிலைக்கு உலகே மாறும் என்ற நம்பிக்கை முளைத்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts