TamilSaaga

சிங்கப்பூரில் இந்திய சமூகத்தினரிடையே நிதி தொடர்பான விழிப்புணர்வு – இன்று நடைபெறும் கருத்தரங்கம்

சிங்கப்பூரில், இந்திய சமூகத்தினரிடையே நிதி தொடர்பான விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நிதி நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூர் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா சமூகத்திலும் பலர் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் வழிகாட்டவும் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று ஜூலை 10 ஆம் தேதி இணையம் வழியில் நடத்தப்பட்டுள்ள இந்த கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது எம் பி செல்வம் அமைப்பு. Money Ideas எனும் அந்த கருத்தரங்கை ஒட்டி கருத்தாய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் இந்தியர்களில் 433 பேர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அந்த கருத்து ஆய்வில் 45 விழுக்காட்டினர் நிதி திட்டமிடுதலில் தங்களுக்கு போதிய நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் இஸ்லாமிய நிதி ஆலோசகர் திரு. ராஜா முகம்மது பேசிய போதும் நிதி தொடர்பான விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க சமூகத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்யலாம் என்று கூறினார்.

இன்று நடைபெறும் இலவச கருத்தரங்கில், நிம்மதியான ஓய்வு காலத்திற்கான உத்திகள், நல்ல நிதி பழக்கங்கள் போன்றவை முக்கிய அம்சங்களாக பேசப்படும் என்றார்.

Related posts