TamilSaaga

சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம்(Terminal 5)எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும்?

ஆசியாவிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலைய முனையமாக கருதப்படுகிறது இந்த சங்கி விமான நிலையம். சங்கி விமான நிலையம் சிங்கப்பூருக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை கொடுத்திருக்கிறது. உலகிலேயே ஏழாவது பரபரப்பான விமான நிலையமாக திகழ்கிறது. இந்த விமான நிலையத்தில் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கின்றன. மிகப் பெரிய விமான நிலையம் மட்டும் அல்லாமல் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட விமான நிலையம் ஆகும். சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த சங்கி விமான நிலையத்தை சுற்றுலாத்தலமாகவே பார்க்கின்றனர். ஆம், சிங்கப்பூரில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருக்கும் சங்கி விமான நிலையம் ஆசிய நாடுகளில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் விமான போக்குவரத்துக்கு மையமாக இருக்கிறது. இதன் காரணமாக, பல இணைக்கும் விமானங்கள் இங்கிருந்து புறப்படுகின்றது. ஏற்கனவே நான்கு முனையுங்கள் இருக்கும் பட்சத்தில் தற்போது ஐந்தாவது முனையம் கட்ட முடிவு எடுத்திருக்கிறது CAG, காரணம் கூட்ட நெரிசல். கொரோனா காலகட்டத்திற்கு முன் இருந்த பயணிகள் போக்குவரத்து தற்போது வெகுவாக அதிகரித்து இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் முந்தைய காலகட்டங்களில் இருந்த போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்று CAG குழுமம் நினைக்கிறது. அதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி 2025 ஆம் ஆண்டு ஐந்தாவது முனையம் அதாவது T5 கட்டுமான பணி தொடங்குவதாக இருக்கிறது.

தற்போது, ஐந்தாவது முனைய கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை புல்லர்டன் ஹோட்டலில் நடந்த சங்கி ஏர்லைன் அவார்ட்ஸ் -ல் போக்குவரத்து துறை அமைச்சர் Chee அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், குறைந்தபட்சம் 16 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவர் என கணக்கிடப்படுகிறது. முதல் காலாண்டின் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 5 மில்லியன் பயணிகள் பயணிப்பர் என அறியப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு சங்கி விமான நிலையத்தை அதிகபட்சமாக இந்தோனேஷியா, மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் சீனா நாட்டு மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் சீனா, இந்தோனேஷியா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டு மக்கள் பயணிக்கக்கூடும். Pre Pandamic காலங்களில் அதாவது 2019 ஆம் ஆண்டு சுமார் 84,000 விமானங்கள் சங்கி விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 14 சதவீதம் விமான போக்குவரத்து உயர்ந்துள்ளது. பயணிகள் விமானங்களை தவிர கார்கோ விமானங்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் Chee,Changi Awards -ல் கூறுகையில், ஐந்தாவது முனையம் கட்டும் வேலையை தொடங்கி விட்டதாகவும், அதுமட்டுமின்றி டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 5 இவற்றை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிவடைந்த பின் 50 மில்லியன் பயணிகளை கையாள முடியும். இந்த அளவு, டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3 இரண்டும் சேர்த்து பிடிக்கும் அளவைவிட அதிகம். இந்த டெர்மினல் 5 சங்கி ஈஸ்ட் டெவலப்மெண்ட் பகுதியில் அமையப்பெறும். இதனுடைய அளவு மூன்று மடங்கு Marina bay -வை விட பெரியதாகும். டெர்மினல் 5 மட்டுமல்லாமல் இதன் பக்கத்தில் பிசினஸ் மற்றும் லைப் ஸ்டைல் hub ஒன்றும் உருவாக உள்ளது.

மேலும் டெர்மினல் 2 மற்றும் டெர்மினல் 5 -ஐ இணைக்க 2.5 கிலோமீட்டர் இணைப்பு பாதை அமைய பெற உள்ளது. இந்த இணைப்பு பாதை ஆட்டோமேட்டிடாக அதாவது தானியங்கி நடைபாதையாக இருக்கும். இதன் மூலம் பயணிகள் டெர்மினல் 2 -ல் இருந்து டெர்மினல் 5 -க்கு எளிதாக செல்ல முடியும். அது மட்டும் இன்றி பயணிகள் உடைய லக்கேஜ் எடுத்து செல்லவும் தனியாக தானியங்கி சேவைகள் இருக்கும். இந்த கட்டுமானத்திற்கு, மொத்தம் 722 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட உள்ளது. மேலும் சீன கட்டுமான நிறுவனமான Shanghai Tunnel Engineering co -க்கு அளிக்கப்பட்ட 622 மில்லியன் கான்ட்ராக்ட் நடப்பில் உள்ளது. இந்த காண்ட்ராக்ட் டெர்மினல் 2 இணைப்பு பாதைக்கு, மற்றும் கட்டுமான பணியில் ஏற்படும் சேதத்தை சரி செய்யவும் போடப்பட்டுள்ளது.

சங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது முனைய கட்டுமான பணி 2013 ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிட் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்த கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2022 ஆம் ஆண்டு வேலைகள் புத்துயிர் பெற்று தொடங்கப்பட்டது. இந்த காலகட்டங்களில், இன்னும் புதுமையாகவும் மற்றும் வசதிகளை மெருகேற்றி வரைபடம் புதுப்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு கட்டுமான பணிகளை தொடங்குவதாக அறிவித்து 2024 ஆம் ஆண்டு கட்டட பணிகள் தொடங்கும் என்று Mr. Chee அறிவித்தார்.

இந்த விமான நிலையத்தின் ஐந்தாவது முனையம் மற்ற நான்கு முனையங்களைப் போல பசுமையாகவும், அதிக ஆற்றல் திறன் கொண்டதாகவும் இருக்கும். இன்னும் மற்ற நான்கு முனையங்களை விட இதில் பல்வேறு புது அம்சங்களும் வசதிகளும் பயணிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளது. தானியங்கி வாகனங்களும், ரோபோடிக்ஸ் சேவைகளும் இடம்பெறும். சரக்கு பொருட்களை ஏற்றவும் இறக்கவும் இதுபோன்ற தானியங்கி சேவைகள் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த டெர்மினல் 5 கட்டுமானம் 2030 களின் மத்தியில் முடிவு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts