TamilSaaga

வீட்டிலே தனிமைப்படுத்தும் முன்னோடி திட்டம்.. யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும்? – விவரங்கள்

கோவிட் தொற்று தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும் என்ற நிலையை பல நாடுகளும் தெரிவிக்கும் சூழலில் தொற்றுடன் இயல்பு வாழ்க்கை வாழ ஒரு பகுதியாக முன்னொடி திட்டம் ஒன்றை சிங்கப்பூத் வருகிற ஆகஸ்ட் 30 முதல் அமல்படுத்துகிறது.

இதன்படி நோய் தொற்று மிகவும் லேசாக இருப்பவர்கள் மற்றும் அறிகுறிகளே இல்லாமல் தொற்று பாதித்தவர்களும் தங்களை வீட்டிலேயே தனிமைபடுத்தி குணப்படுத்திக்கொள்ளும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இத்தகைய தனிமைபடுத்தப்படும் நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வீட்டில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டிருத்தல், கர்ப்பிணி பெண்கள், இதர நோயாளிகள் போன்றவர்களுக்கான கட்டுப்பாடுகள் போன்றவை இதில் அடங்கும்.

“நோயுடன் சேர்ந்து வாழும் அடுத்த நிலைக்கு இந்த திட்டம் ஒரு முக்கிய படி” என அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.

மருத்துவமனை மற்றும் பொது பராமரிப்பு கூடங்களில் ஏற்படும் அதீத நோயாளிகள் அனுமதியை இந்த வீட்டில் தனிமைப்படுத்தும் திட்டம் மூலம் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts