TamilSaaga

சட்டவிரோதமாக Stun Device வைத்திருந்த நபர்.. காதலிக்கு காயம் ஏற்படுத்தியதும் அம்பலம் – சிங்கப்பூர் காவல்துறையால் கைது

சிங்கப்பூரில் Alexander Aw Boon Hao என்ற 30 வயது நபர் பொது இடத்தில் மின் அதிர்வு (Stun Device) சாதனத்தை தன்னுடன் வைத்து இருந்ததை காவலர்கள் கண்டுபிடித்தனர். அது Apple i Phone போன்ற வடிவில் லேசாக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி இதனை கண்டுபிடித்து காவலர்கள் கைது செய்தனர்.

விசாரனையின் போது அந்த நபர் இந்த சாதனங்களை தனது எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள இணைய தளத்தில் ஆர்டர் செய்து சுமார் 20 வெள்ளி செலவழித்து வாங்கியுள்ளதாக தெரிய வந்தது.

அதோடு மட்டுமல்லாமல் சாதனம் காயத்தை ஏற்படுத்துகிறதா என்று தனது உடலிலே அந்த நபர் சோதித்து பார்த்ததும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அந்த நபர் தனது காதலியின் தலைமுடியை இழுத்து காயத்தை ஏற்படுத்திய வழக்கும் இதோடு சேர்த்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

உரிமம் இல்லாமல் ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் மற்ற குற்றத்துக்கும் சேர்த்து அந்த நபருக்கு 4 மாதம் சிறை, 3000 வெள்ளி அபராதம் தண்டனையாக விதிக்கப்பட்டது.

Related posts