TamilSaaga

சிங்கப்பூரர்களுக்கு இருமொழித் திறன் தரும் பரிசு – துணைப்பிரதமர் விளக்கம்

சிங்கப்பூர் மக்கள் தங்களுடைய கலாச்சாரத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ள இரு மொழித்திறன் உதவி அளிப்பதாக துணை பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இது எல்லாவற்றையும் கடந்து சிங்கப்பூர் மக்கள் அவர்களுடைய அடையாளத்தையும் இலக்கையும் உருவாக்குவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டன்மண் உயர்நிலைப் பள்ளியின் 65 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை பிரதமர் Heng Swee Keat இந்த தகவலை தெரிவித்தார். வட்டார மொழிகளில் சிறந்து விளங்குவதன் வாயிலாக ஆசியாவில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் அதிகம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் சமூகத்தில் பன்முகத்தன்மையை அதிகரித்தால் ஒற்றுமையை கட்டிக்காப்பது சிரமம் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூரில் அண்மைக்காலமாக இனம் சார்ந்த சில சம்பவங்கள் கவனத்தை ஈர்த்து வருவதாகவும், பல்லாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட வந்த ஒற்றுமை எவ்வளவு சுலபத்தில் சிதறிப் போய் இருக்கின்றது என்பதை இத்தகைய சம்பவங்கள் நினைவு விடுவதாகவும் அவர் கூறினார்.

பல அன்டுகளாக சிங்கப்பூர் சிறந்த ஒற்றுமைக்கு சான்றாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts