சிங்கப்பூரில் கலைகளின் அரசியும், இந்திய பாரம்பரிய நடத்திற்காக மக்களால் மிகவும் விரும்பப்பட்ட சாந்தா பாஸ்கர் அவர்கள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 26) காலமானார், அவளுக்கு வயது 82. சாந்தா அவர்கள் பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமியில் தலைமை நடன இயக்குனராகவும் கலை இயக்குநராகவும் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது கணவர் கே.பி பாஸ்கர் அவர்களால் 1952ல் நிறுவப்பட்டது. அப்போது இந்த மன்றம் துவங்கப்பட்ட காலத்தில் முதலில் சாந்தா அங்கு பயிற்றுவிப்பாளராக சேர்ந்தார் என்று கூறபடுகிறது.
இந்த உலகில் நான் வியக்கும் ஒரே “சூப்பர் ஸ்டார்” லீ குவான் யூ – ரஜினிகாந்த் பெருமிதம்
அந்த அகாடமி தற்போது அதன் 70 வது ஆண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் உள்ளது மற்றும் கடந்த வார இறுதியில் ஸ்டாம்போர்ட் ஆர்ட்ஸ் சென்டரில் “சங்கீத சப்ததி” என்ற பெயரில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தியது. அப்போது நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிக்கான டிக்கெட்களும் முழுமையாக விற்றுத்தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாந்தா பாஸ்கர் அன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது, அப்போது தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அகாடமியின் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அனுப்பப்பட்ட குறிப்பின்படி, அன்றைய தினம் மாலை வேளையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. அதன் பிறகு இன்று காலை அந்த அகாடமி சாந்தா தனது இறுதி பயணத்தை துவங்கியுள்ளார் என்ற செய்தியை வெளியிட்டது.
“சிங்கப்பூர் வந்திறங்கும் இந்தியர்களுக்கு ஓர் Good News” : இனி Changi Airportல் PCR Test எடுக்கவேண்டாம் – ART எடுக்கவும் உதவி! Exclusive Details
சாந்தா அவர்களின் பணி சிங்கப்பூரில் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1990 இல் மதிப்புமிக்க கலாச்சாரப் பதக்கமும், 2016 இல் பொது சேவை நட்சத்திர விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, சாந்தா பாஸ்கருக்கு மெரிட்டோரியஸ் சர்வீஸ் மெடல் வழங்கப்பட்டது மற்றும் சிங்கப்பூர் மகளிர் Hall of Fameல் அவர் சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகளாக சிங்கப்பூர் கலைத்துறைக்கு அவர் ஆற்றிவந்த தொண்டு யாராலும் மறக்கமுடியாத ஒன்று. இவரது இழப்பு சிங்கப்பூர் இந்திய கலைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பு என்றே கூறலாம்.