TamilSaaga

Breaking : 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் துவங்கிய சிங்கப்பூர் – மதுரை நேரடி விமான சேவை – வாரம்தோறும் 4 விமானங்கள்! Exclusive Update

சுமார் இரண்டு ஆண்டுகளாக தடைபட்டிருந்த சிங்கப்பூர் மதுரை இரு மார்க்கமான நேரடி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சேவை தற்போது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஏற்பட்ட முடக்க நிலை காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உலக அளவில் ஏற்பட்ட விமான போக்குவரத்துக்கு சிக்கலின்போது சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு இரு மார்க்கமாக செயல்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இந்த உலகில் நான் வியக்கும் ஒரே “சூப்பர் ஸ்டார்” லீ குவான் யூ – ரஜினிகாந்த் பெருமிதம்

ஆனால் அதன் பிறகு கடந்த பல மாதங்களாக இந்தியாவின் பல நகரங்களில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Scoot மற்றும் இண்டிகோ உட்பட பல விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. ஏற்கனவே மதுரையில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு விமானங்கள் சென்று வந்த நிலையிலும் நேரடி விமானங்கள் இல்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

இந்த சூழலில் தான் சிங்கப்பூர் மற்றும் மதுரை இடையேயான நேரடி விமான சேவையை துவங்கி உள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அனைத்து வாரங்களில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவை அளிக்கப்பட உள்ளது. சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு விமானம் புறப்பட்டு மதுரை வந்தடையும். அதேபோல மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம்தோறும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு விமானங்கள் புறப்படும். இது முற்றிலும் NON VTL சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Work Permit holders கட்டாயம் Entry Approval பெற்று 2 டோஸ் தடுப்பூசி போடப்பெற்று மற்றும் PCR சோதனை எடுத்த பிறகே இந்த சேவை மூலம் பயணிக்க முடியும். அதே போல S Pass, Dependent Pass, Long Time Pass மற்றும் Employment Pass வைத்திருப்பவர்கள் வழக்கம் போல Entry Approval இல்லாமல் ஆனால் உரிய PCR சோதனை மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசியோடு பயணிக்கலாம். அதே போல Non VTL சேவை மூலம் வருவோருக்கான 7 நாள் தனிமைப்படுத்துதல் இந்த பயணத்திற்கு பொருந்தும்.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600223091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts