TamilSaaga

சிங்கப்பூர் Clarke Quay புத்தாண்டு கொண்டாட்டம் – விதிகளை மீறிய இரு இந்திய வம்சாவளியினர் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட புத்தாண்டுக் கூட்டத்தின் போது பெருந்தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தால் நேற்று செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவில் இரண்டு இந்திய வம்சாவளி ஆண்களும் அடங்குவர் என்று ஒரு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. அதீஷ் அசுதோஷ் ராவ் மற்றும் ஷ்யாமா குமார் ஷரத் ஆகியோர் தலா இரண்டு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டுள்ளனர்.

தாயின் கழுத்தில் வழிந்த ரத்தம் : திடுக்கிட்டுப்போன மகன் – சற்று நேரத்தில் பரபரப்பான சிங்கப்பூர் Yishun பகுதி

மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளில் பாதுகாப்பான தூரத்தைக் கடைப்பிடிக்கத் தவறியமை மற்றும் சரியாக முகமூடியை அணியாதது என்று இரண்டு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் 19 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குழுக்கள், கிளார்க் குவேயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 1 மீட்டர் கட்டாய சமூக இடைவெளியை பராமரிக்காதது குறித்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.

சரத் ​​மற்றும் ராவ் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்பிய நிலையில், அவர்கள் மீண்டும் ஏப்ரல் 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் வழக்கறிஞரைப் பெற விரும்புகிறார்கள் மற்றும் அடுத்த மார்ச் 15 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

“வருகை பதிவுக்கான ஊக்கத்தொகை” : Sick Leave எடுப்பவர்களை பாதிக்கிறதா? சிங்கப்பூரில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் MOM

குறிப்பிட்ட அந்த புத்தாண்டு ஈவ் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதாக நம்பப்படுகிறது. பெருந்தொற்று பாதுகாப்பான மேலாண்மை விதிகளை அப்பட்டமாக மீறியதாகவும், Super Spreader நிகழ்வாகவும் அதிகாரிகள் முத்திரை இந்த நிகழ்வை கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியான வீடியோவில் கூட்டமாக ஆரவாரம் செய்த இளைஞர்களை காணமுடிந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்ற மூன்று ஆண்கள், ஹர்ஜாஸ் சிங், வர்மா புல்கிட் மற்றும் கோட்ரா வெங்கட சாய் ரோஹன்கிருஷ்ணா – ஆகிய அனைவரும் 19 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் புத்தாண்டு ஈவ் கூட்டம் தொடர்பாக ஜனவரி மாதம் இதேபோல் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts