சிங்கப்பூர் அரசு தற்போது பல நாடுகளுக்கும் தொடர்ச்சியாக தளர்வுகளை வழங்கி வருகின்றது என்பதை நாம் அறிவோம். சுமார் ஒரு மாத கால தடைக்கு பிறகு கடந்த மாதம் ஜனவரியில் மீண்டும் VTL சேவைகளை துவங்கியது சிங்கப்பூர் அரசு. பெரிய அளவிலான தடைகள் எதுவும் இல்லாமல் தற்போது மக்கள் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்துசெல்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி S-Pass, Dependent Pass, Employment Pass மற்றும் Long Time Pass வைத்திருப்பவர்களில் IPA உள்ளவர்கள் நிச்சயம் சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கியதும் PCR சோதனை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த உலகில் நான் வியக்கும் ஒரே “சூப்பர் ஸ்டார்” லீ குவான் யூ – ரஜினிகாந்த் பெருமிதம்
அதே போல விசா கார்டு வைத்திருக்கும் S-Pass, Dependent Pass, Employment Pass மற்றும் Long Time Pass வைத்திருப்பவர்கள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கிய பிறகு நேரடியாக அவர்களது வீடுகளுக்கு சென்று ART சோதனை செய்து அதன் முடிவுகளை அரசிடம் தெரிவித்தால் போதுமானது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த விதியிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி Worker பாஸ் மூலம் சிங்கப்பூர் வருபவர்களை தவிர மற்ற மேற்குறிப்பிட்ட பாஸ் வைத்துள்ள அனைவரும் சாங்கி விமான நிலையம் வந்திறங்கியதும் PCR மேற்கொள்ள தேவையில்லை.
இந்நிலையில் தற்போது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்கு வந்திறங்குபவர்களுக்கு கீழ் காணும் இந்த சீட்டு வழங்கப்படுகிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு “நீங்கள் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் SSS ART எனப்படும் Self Supervised Swab ART சோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்த லிங்கை பயன்படுத்தி தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள CTC அல்லது QTC சோதனை மையங்களில் நீங்கள் ART சோதனையை மேற்கொள்ளலாம்.” “மேலும் நீங்கள் எடுத்த SSS ART சோதனை முடிவுகள் வருவரை நீங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் தனியார் போக்குவரத்து மூலம் சென்று மருத்துவரை அணுக வேண்டும்.”
இதனை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது, உண்மையில் சிங்கப்பூரின் இந்த முடிவு காரணமாக பலர் நேரடியாக சாங்கி விமான நிலையம் வந்து உடனே தங்கள் இல்லங்களுக்கு செல்ல முடியும். ஆனால் ART முடிவுகள் Negative என்று வந்தால் மட்டுமே அவர்கள் சமூகத்தில் கலக்க முடியும்.
News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600223091