சிங்கப்பூரில் ஒருவர் திடீர் கோடீஸ்வரராக மிக மிக அரிதான வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது.
ஆம்! வரும் வெள்ளியன்று (பிப்ரவரி 11) இந்த ஆண்டுக்கான Singapore Poolsன் வருடாந்திர Toto Hongbao குலுக்கலின் பரிசுத் தொகையாக S$16 மில்லியன் வழங்கப்பட உள்ளது. சிங்கப்பூர் வரலாற்றிலேயே இது மிகப்பெரிய பரிசுத் தொகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய ஜாக்பாட் வெற்றிகளைப் பதிவு செய்யும் Singapore Pools பட்டியலின்படி, சிங்கப்பூரின் வரலாற்றில் S$16 மில்லியன் என்பது மிகப்பெரிய பரிசாக இருக்கலாம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு குலுக்கல் நடத்தப்படும்.
கடந்த வியாழன் அன்று நடந்த Group 1 பரிசான $1,568,402க்கு யாரும் வெற்றிப் பெறாததால், இந்தத் தொகை தற்போது $16 மில்லியனாக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் பூல்ஸின் இணையதளத்தின்படி, இந்தத் தொகையானது 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகமாகும். கடந்த ஆண்டு டோட்டோ ஹாங்பாவோ குலுக்கலுக்கான ஜாக்பாட் $8 மில்லியன் ஆகும்.
இந்நிலையில், சிங்கப்பூர் பூல்ஸ் அதன் விற்பனை நிலையங்களின் செயல்பாட்டு நேரத்தை வெள்ளிக்கிழமை நீட்டிக்கவுள்ளது.
சிங்கப்பூர் பூல்ஸ் பிரதான கிளை பிப்ரவரி 11 அன்று காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும்.
மற்ற சிங்கப்பூர் பூல்ஸ் கிளைகள் பிப்ரவரி 11 அன்று காலை 8:30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
சிங்கப்பூர் பூல்ஸ் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 10 வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பிப்ரவரி 11 ஆம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் செயல்படுவார்கள்.
இருப்பினும், கிளைகள் முழுவதும் செயல்படும் நேரம் மாறுபடலாம். சிங்கப்பூர் பூல்ஸ், குறிப்பிட்ட விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரத்தைத் தங்கள் இணையதளத்தைப் பார்க்குமாறு தெரிவித்துள்ளது.