TamilSaaga

“சிங்கப்பூரில் நடந்த கொடூரமான வழக்குகளில் இதுவும் ஒன்று” : கெஞ்சியும் கேட்காமல் கற்பழித்த நபர் – காதலிக்கு நேர்ந்த கொடூரம்

சிங்கப்பூரில் ஒரு தகராறில் தனது காதலியை பலவந்தமாக பிளாட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது ஆடவருக்கு ஒன்பது ஆண்டுகள் மூன்று வார சிறைத்தண்டனை நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் நடந்த மிகவும் கொடூரமான மற்றும் மோசமான குற்ற வழக்குகளில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட 29 வயதான பெண்ணின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பெயரிட முடியாத அந்த நபருக்கு ஆறு பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

பிப்.11 அன்று Toto Hong Bao லாட்டரி குலுக்கல்.. இதுவரை சிங்கப்பூர் வரலாற்றிலேயே இல்லாத மெகா பரிசுத் தொகை அறிவிப்பு!

தன் மீது சுமத்தப்பட்ட ஒரு கற்பழிப்பு குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கில் அந்த நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் முதலில் 2017ல் அறிமுகமானவர்கள் என்று நீதிமன்றம் கூறியது. பிறகு ஜனவரி 2019ல் அந்த நபர் ஒரு வழக்கில் இருந்து விடுதலை ஆனா பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு அந்த பெண்ணுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினர். மேலும் அந்த நபர் பின்னர் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்பில் குடியேறினார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.

குற்றங்கள் நடந்த நேரத்தில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அவரது காதலி வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் நவம்பர் 29, 2020 அன்று, அந்த தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அடுத்த நாள் அதிகாலையில், அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை அவருடைய வேலை நேரத்தில் அழைத்து பேச அவர்களுக்கு இடையே தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண், தான் பிரிந்து செல்ல விரும்புவதாகவும், அழைப்பை துண்டிக்க விரும்புவதாகவும், அவரது அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புகளை நிராகரிப்பதாகவும் கூறினார். நவம்பர் 30, 2020 அன்று அதிகாலை 4 மணியளவில், பாதிக்கப்பட்டவரின் பணியிடத்தில் அந்த நபர் குடிபோதையில் காணப்பட்டார்குறைந்தது 10 கேன்கள் பீர் மற்றும் இரண்டு 1 லிட்டர் விஸ்கி பாட்டில்களை உட்கொண்டார் என்று கூறப்படுகிறது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து கூச்சலிட்டு, அவர் தனது வாழ்க்கையை வீணடிப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறைக்கு செல்ல பயப்படவில்லை என்று கூறி, அலுமினிய வாட்டர் பாட்டிலை அந்த பெண் மீது வீசியும் மற்றும் நெற்றியிலும் விரல்களிலும் கொடூரமாக தாக்கியுள்ளார்.

மேலும் அங்கிருந்து வெளியேறும் முன், ஒரு உலோக கம்பியால் அவரை தாக்கினார், கூடுதலாக அந்த பெண் அணிந்திருந்த மோதிரத்தைத் சேதப்படுத்தி, அவரது தொடையில் காயம் ஏற்படுத்தினார். அடுத்த நாள் அந்த நபர் கைதுசெய்யப்பட்ட அந்த பெண்ணின் தந்தை அவரை அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றினர். அதன் பிறகு சில நாட்களில் வெளியே வந்து அதிக அளவில் குடிக்க துவங்கியுள்ளார்.இந்நிலையில் ஜனவரி 15, 2021 அன்று, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு குற்றவாளியை தனது பிளாட்டுக்கு அழைக்க முடிவு செய்து ஒரு இரவு விடுதியில் அறையை புக் செய்துள்ளார் அந்த பெண்.

சிங்கப்பூரில் நல்லது சொன்ன வீட்டு பணிப்பெண்ணை காட்டுமிராண்டித் தனமாக அடித்த இந்திய முதலாளி – பணக்கார திமிருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு

இதனையடுத்து அந்த நபர் மாலை 5.20 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் குடியிருப்புக்கு வந்துள்ளார், ஆனால் அவர் வாயிலில் அவரைச் சந்தித்தபோது அவர் மீது மது வாசனை வீசியது. அங்கேயே தகராறு துவங்கியது, உடனே அங்கிருந்து வெளியேற முயன்ற பெண்ணை முடியை பிடித்து படுக்கைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் இருமுறை அங்கிருந்த டேபிளில் மோதி காயமடைந்துள்ளார். அந்த பெண் மறுத்தும் பல முறை கெஞ்சியும் கேட்காமல் அந்த நபர் அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். இதன் பிறகு போலீசில் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts