TamilSaaga

சிங்கப்பூரில் நல்லது சொன்ன வீட்டு பணிப்பெண்ணை காட்டுமிராண்டித் தனமாக அடித்த இந்திய முதலாளி – பணக்கார திமிருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண் மீது கொண்டு கோபத்தால் ஒரு நபர் பணிப்பெண்ணின் முகத்தில் மூன்று முறை இரக்கமின்றி குத்தியுள்ளார். இதில் அந்த பணி பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க கிருஷ்ணன்க்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) அன்று நீதிமன்றத்தில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு 8,500 S$ இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேள்வி கேட்டதால் வெடித்த சர்ச்சை.. 100வது ஆண்டை கொண்டாடவிருந்த “சிங்கப்பூர் இந்தியா சங்கம்” இழுத்து மூடல் – இருதரப்பினர் இடையே மோதல்

ஒரு வீட்டுப் பணியாளருக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த பணிப்பெண்ணின் தலை, தோள்பட்டை மற்றும் தொடையில் உதைத்த இரண்டாவது குற்றச்சாட்டு அவரின் தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட 27 வயதான மியான்மர் நாட்டவர், சூரியாவின் சகோதரியால் பணியமர்த்தப்பட்டார் என்று நீதிமன்றம் கூறியது. சூர்யா தனது சகோதரி, பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் Hougang-ல் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த மே 29, 2020 அன்று இரவு, சூர்யாவின் குடும்பத்தினர் அவரது தந்தையின் பிறந்தநாளை அந்த குடியிருப்பில் கொண்டாடினர். கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு, சூர்யா 750 மில்லி மதுபானத்தை உட்கொண்டு போதையில் இருந்தார் என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றனர். இரவு சுமார் 8.30 மணியளவில், சூர்யாவிற்கு கொஞ்சம் ஜெல்லியை வெட்டும் தரும்படி சூர்யாவின் தாய் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவரும் அவ்வாறு செய்ய சமையலறைக்குச் சென்றார், இந்நிலையில் சூர்யா அவரைப் பின்தொடர்ந்தார், அங்கே சென்று அவருக்கு கொஞ்சம் உணவைத் தயாரிக்க கூறியுள்ளார்.

சூர்யா நிறைய சாப்பிட்டார் என்று பணிப்பெண் ஒரு கருத்தை கூற கோவப்பட்ட அவர், பணிப்பெண் ஜெல்லியை போதிய அளவில் வெட்டித்தரவில்லை என்று கூறி மேலும் கோபமடைந்துள்ளார். அவர் பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணை திட்ட, அவரது தாயார் உடனடியாக அந்த விஷயத்தில் தலையிட்டு அவரைத் திட்டியுள்ளார். உடனே அவர் சமையலறையை விட்டு வெளியேறினார், ஆனால் பின்னர் திரும்பி வந்து பணிப்பெண்ணின் முகத்தில் மூன்று முறை கொடூரமாக குத்தியுள்ளார். ஒரு குத்து அவளது வலது கண்ணுக்குக் கீழே விழ, அவர் வலியால் முகத்தை மூடிக்கொண்டு குனிந்தார்.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் Ng Eng Hen-க்கு கொரோனா உறுதி.. மக்களே இனி ரொம்ப கவனமா இருங்க!

சூர்யாவை அவரது குடும்பத்தினர் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவருக்கு எழுப்பு முறிவுகள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கண் அசைவில் வலியுடன் சிராய்ப்பு மற்றும் இரத்தப்போக்கு இருந்தது. இறுதியாக சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை காவல்துறையினரிடம் புகாரை பதிவு செய்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts